Posts

Showing posts from August, 2011

விலைமாதர்கள்.....

Image
விலைமாதர்களை தயைகூர்ந்து வெறுப்போடு பார்க்காதீர்கள் உள்ளத்தை தொடுபவன்  உள்ளூரிலும், வெளியூரிலும், எவ்வூரிலும் இல்லையெனின் பெண்சிலை கூட தான் கன்னியாக இருப்பதைத்தான் கடைசிவரை விரும்பும். உடலை மட்டும் தொடுபவனை  பெண் எப்போதும் மனதால் தொடுவதில்லை மனதை தொடுபவனையோ  பெண் மரணம் தாண்டியும் மறப்பதில்லை. வித்துப்பிழைக்காமல் செத்து தொலையலாமே என்பவர்களுக்கு  சாவு பற்றி என்ன தெரியும்? கவலை வேண்டாம் கண்ணியமான பெண்களுக்கும் ஆண்களுக்கும் தொட்டுச் செல்லும் எத்தனையோ பேரில் எவனேனும் ஒருவன் அவன் மனதை அவளுக்கென விட்டுச் செல்லமாட்டானா என்ன? அப்படி நேர்ந்தால்.... அந்த வினாடியே வித்துப் பிழைக்காமல் அவளே செத்துப் போவாள் அதுவரையிலும்.... விலைமாதர்களை தயவுசெய்து யாரும் வெறுப்போடு பார்க்காதீர்கள்.

நானும் அவர்களும், நானும் நானும்...

Image
நானோ  "தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என்றேன் அவர்களோ  நீ அல்-கொய்தாவா இல்லை லக்ஷர்-இ-தோய்பாவா என்றார்கள் நானோ  ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் என்றேன் அவர்களோ  அனுமதிக்கு நாளொன்றுக்கு எத்தனை தருவாய் என்றார்கள். நானோ  "அறங்கள் யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்றேன் அவர்களோ  தலைக்கு இருபத்திஐந்தாயி ரம் கொடுத்தால்  ஏழைக்கு எழுத்தறிவிக்க தயார் என்றார்கள். நானோ  அய்யோ மளிகைக்கடை கடனுக்கு என் தமிழ்ப்பெண்கள்  தங்கள் தலை முடியை விற்கிறார்களே என வேதனைப்பட்டேன் அவர்களோ  ஆஹா ...கிலோவுக்கு ஐந்தாயிரம் தருகிறார்களாமே என குதூகளித்தனர். நானோ  அய்யோ ஏதும் செய்ய வக்கில்லையே எனக்கு என வேதனைப்பட்டேன் அவர்களோ  நீ சும்மா இருப்பதே எல்லோருக்கும் சுகம் என்றார்கள். எல்லோரையும் போலவே நானும் சுகமாக தூங்கிப்போனேன் சரி .....இங்கே இப்படியே சிலர் சும்மா, சுகமாக இருப்பதால்தானோ அங்கே பலருக்கு எல்லாமே எப்போதும் சுமையாக இருக்கிறது  என்று நினைத்தவாறே. தூக்கத்தில் தொடர்ந்தது ....... எனக்கும் அவர்களுக்குமான, எனக்கும் எனக்குமான  என் தர்க்கப்போராட்டம்.

நிகழ்வுகளும் நானும் ....

Image
என் ஆத்தா, என் அப்பன், என் மனையாள், என் மக்கள் என்று மட்டுமே இருந்த என் மனதில் அடிக்கடி மலரது ஒரு எண்ணம்: எல்லோருக்கும் ஏதேனும் செய்யோணும். நிகழ்ந்ததும், நிகழ்த்தபட்டதுமாய் ஊரெங்கும் எத்தனையோ நிகழ்வுகள்; அத்தனை நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னும்  எத்தனையோ உணர்வுகள். உள்ளத்தை உறைய வைக்கும் நிகழ்வுகள் ஒருபுறம்; நெஞ்சத்தை நெகிழவைக்கும் நிகழ்வுகள் மறுபுறம். காரணமின்றி இங்கே ஏதும் நிகழ்வதில்லையாம்  மழை இறைவனின் மகிழ்ச்சி; புயல் அவனின் கோபம்; நன்றாய் இருப்பவன் திடீரென நசிந்தால் அது விதி; ஒழுங்காய் ஓடும் ரயில் ஓர் நாள் திடீரென தடம் புரண்டால் அது சதி. சில நிகழ்வுகளும் நிகழ்வுகளுக்கான காரணங்களும் எத்தனை சிந்தித்தும் புரியப் போவதில்லை என்பது சிந்தித்துப் பார்த்தால் தெரிந்து விடுகிறது. நிகழ்வுகளுக்காய் காத்திருந்து அறிவு ஜீவியாக நம்மை எண்ணியே ஒவ்வொரு நிகழ்வு பற்றிய நம் உள்ளக் கருத்தை உரத்துக்கூறி, ஊர் கூட்டி உபதேசம் செய்து எத்தனை பேர் என் பின்னால்  என பார்த்துக் கொள்வதிலேயே  கழிந்திடுமோ நம் காலம்? மழைக்கால மத்தியான நேரத்தில்  சுடு சோறு எனக்கு சுகம். ஆயினும் நான் அறிவேன்  அதே நேரத்தில் இங்கே ப

அட போங்கய்யா ............

Image
அறிவியல் சொல்லித்தரவேண்டிய அப்துல் கலாமின் வார்த்தைகளில்  அரசியல் நெடி... மேடையில் இருந்து குதித்தும், பெண் உடையில் ஓடியும்  ஒளிய முயன்ற பாபா ... அவருக்காக வக்காலத்து வாங்கும் விதமாக அடையாள உண்ணாவிரதம் இருக்கும் அண்ணா ஹசாரே.... அலாக்காக தூக்கிக் கொண்டு போய் அழுப்பே தெரியாமல் தனி விமானத்தில் ஹரிதுவாரா வரை விட்டு வந்த அரசாங்கத்தின் அன்பை "ஜாலியன் வாலாபாக்"கிற்கு இணையாக பேசும் பா.ஜா.க. அடுத்த நாளே ஏதோ ஆட்சியையே பிடித்தாகிவிட்டது போ ல  ஆனந்தக் களியாட்டமாடிய அக்கட்சியின் அவைத்தலைவர் சுஷ்மா... மகனை ஆங்கிலப் பள்ளியிலே சேர்க்கமுடியாமல் அனலை தன் மீது அள்ளி வீசிக்கொண்ட பைத்தியக்கார பெண்மணி மாநிலத் தலைநகரின் மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடும் எக்மோரிலே, சாக்கடைத் தண்ணீரிலே சப்பி போட்ட மாங்கொட்டையாய் உயிர்போகும் நிலையில் என் தமிழன் ஒருவன் அவனைப்பற்றி எள்ளளவும் கவலை இல்லாது இப்போதும் ஈழத்து தமிழனுக்காய் நீலிக்கண்ணீர் வடிக்கும் எங்கள் வைக்கோவும், விஜய லெட்சுமியின் செல்வச் சீமானும். இத்தனை நிகழ்வுகளுக்கு மத்தியிலும் ... அரசாங்கம் ஆயிரமாயிரமாக வர

கையளவு என் கவிதை தொகுப்பு...

Image
ஏதாவது கிருக்கலாமே என்றெண்ணி இன்று என் கவிதை தொகுப்பை தூசு தட்டி தும்மலுடன் திறந்து ஏதுமே எழுதியிராத ஒரு வெள்ளை பக்கத்தில் ஏதோ எழுத எண்ணி சரியான வார்த்தைகளையும் , வரிகளையும் தேட நினைத்து கண் மூடினேன் ..... திடும் என்று இடித்த இடி ஒலியில் விழித்துப் பார்த்த போதுதான் தெரிந்தது வைத்த பேனா வைத்த படி இருக்க வெகு நேரத்திற்கு தூங்கித்தான் போயிருக்கிறேன் வெகு சுகமாக என்று. துக்கம் இன்றி தூங்க இனி இதுதான் சரியான வழி இந்த உணர்தலில் பிறந்தது உள்ளத்தில் உற்சாக வெள்ளம் இனி என் கவிதை தொகுப்பில் எப்போதோ உள்ளத்தில் உற்சாகம் இருந்த போது காகித பக்கங்களில் என் எழுதுகோல் உதிர்த்த வார்த்தைகளும் வரிகளும், ஏதுமே எழுதாது விட்டு போன ஏதோ ஒரு சில வெள்ளை பக்கங்களும் இருக்குமேயன்றி நிச்சயம் இருக்காது தூசியும் துப்பட்டையும். சுத்தமான தலையணையே இங்கு வெகு சுகம் தயை கூர்ந்து இப்போதே கேட்டு வராதீர் எங்கே பார்க்கலாம் எப்படித்தான் இருக்கிறது என் கலை கிறுக்கல்கள் என்று. எந்த இடிக்கும் விழிக்காது என் விழிகள் நிரந்தரமாக மூடிப்போகும் அந்த நாளில் என் நெஞ்சைப்பிளந்து விலா எழும்புகளை ஒடித்தெரிந்து நெஞ்சுக்கூட்டுக்க

என் காதலி ......

Image
அழகான பூக்களும் நீயே அமைதியான நீல வானமும் நீயே ஆர்ப்பரிக்கும் அலை கடலும் நீயே என் இதயம் தொடும் இசையும் நீயே அந்த இசையே தொழும் இன்னிசையும் நீயே தனிமை தராத இனிமையும் நீயே என்றும் இனிமை கெடாத இளமையும் நீயே ஆன்மாவை ஆளும் ஆலயமும் நீயே அறிவு தேடும் என் வாழ்வின் அர்த்தமும் நீயே உறக்கம் கலைக்கும் உதயமும் நீயே இமைகளை மூடும் நல் இரவும் நீயே நினைவில் நிற்கும் நிலமகளும் நீயே கனவில் கலக்கும் கலைமகளும் நீயே என்னை தாலாட்டும் என் தாய் மடியும் நீயே என் உயிரோடு உறவாடும் உருவகமும் நீயே என் மனம் மயக்கும் மல்லிகை மணமும் நீயே என் குணம் உயர்த்தும் குலமகளும் நீயே என் வானத்தில் எப்போதும் கண்சிமிட்டும் விண்மீனும் நீயே என் வனத்தில் என்றும் வண்ணத்துப்பூச்சியாய் வலம் வருவதும் நீயே என் தூரிகையில் வழிந்தோடும் ஓவியமும் நீயே என் யாழிசையில் வளைந்தாடும் நாட்டியமும் நீயே எல்லாம் நீயே, எங்கும் நீயே, என்னுள்ளும் நீயே, என்னவளும் நீயே, என்னுயிரும் நீயே, எனை ஆளும் மண்ணவளும் நீயே வாழிய நீயே என்றுன்னை என்றும் வாழ்த்துகிறேன் நானே

மரணமா, மயக்கமா?

Image
வெறும் மயக்கம்தான் மரணமில்லை என்று எண்ணத் தோன்றும் உற்றுப்பார்க்கையில் உணர முடியும் உறைய வைக்கும் உண்மை மரணம்தான் மயக்கமில்லை. எதனால் நேர்ந்தது? எதன் மீதும் மோதியதாகத் தெரியவில்லை எவராலும் அடித்து வீழ்த்தப்பட்டதாகவும் தெரியவில்லை. நேற்றுவரை  விண்ணிலே உயர உயர பறந்த உன் இறகுகள் இன்று  மண்ணிலே எறும்புக்கு இரையாக போனது ஏனோ? வயது உன்னை வாழவிடவில்லையா? இல்லை இறைவன் ஆணைப்படிதான் இறந்து போனாயோ? உன் மரணம் என்னை உறைய வைக்குது என் உயிரையோ உருக்குலைந்து உருக வைக்குது.

குழந்தைகள் ..........

Image
எல்லா பூக்களும் அழகு எல்லா புள்ளைங்களும் அழகு பூக்களை படைத்த இறைவனை புண்ணியவான் என்றால் இப்படி புள்ளைங்களை படைத்த அவனை புருஷன் என்பேன் என் இனம் மாறி. கடவுளோடு காதல் கொண்டு அவன் புள்ளைங்களை பத்து பத்து மாதமாய் பல முறை சுமப்பேன்.

காதல்....

Image
சிணுங்கியது தொலைபேசி எடுத்து அதன் வாய்க்கு என் காதினை கொடுத்தேன். மறு முனையில் நண்பர் காதல் குறித்து சட்டென ஒரு கவிதை கேட்டார். ஊரெங்கும் அனல் அடித்தாலும் உள்ளுக்குள்ளே மழை அடிக்க வைக்கும் அதிசயம் "ஐய்யோ!!!" என அதிர வைக்கும் அவசியம் ஒரு வலி குறைத்து மறு வலி வளர்க்கும் மாமருந்து உள்ளத்தில் இது உதித்து விட்டாலோ உவர்க்கும் ஊறுகாய் கூட இங்கே ஆகும் ஓர்  விருந்து என்று முடித்தேன். எதிர் முனையில் மௌனம் என்ன நினைச்சாருன்னு நேக்கு புரியல்லே இனி கவிதை கேட்டு மறுபடியும் அழைப்பரா என்றும் தெரியல்லே.

நடைபாதை காதல் ...........

Image
காதலை சொல்லுவதில்தான் எத்தனை ரகம் அதில் இது ஒரு தனி ரகம். எத்தனையோ கால்கள் நித்தமும் நடை போடும் நடை பாதையில் தன் உள்ளத்தையும் அதில் அவள் பெயரையும் ஓவியமாய் வரைந்து விட்டுப் போயிருக்கிறான் எவனோ ஒரு ரோசியின் ராசா. இந்த நடைபாதை காதலை கண்டு என் உள்ளம் உருகவில்லை இப்படி தன் காதலை களங்கப்படுத்தி போயிருக்கும் அந்த காதல் கள்வனை கண்டுபிடித்து கண்ட துண்டமாய் வெட்டிப்போட உள்ளம் துடித்தாலும் "அய்யோ பாவம்" என்ற எண்ணத்தையும் ஏனோ தவிர்க்க இயலவில்லை. அவனின் ரோசியின் காந்த கண்களில் படும்வரையிலாவது இந்த காதல் காவியம் இருந்து தொலையட்டுமென ஏறி நடக்கப்போன என் கால்களை எப்படியோ கட்டுப்படுத்தி உள்ளத்தில் பீறி வந்த துக்கத்தை துச்சப்படுத்தி இந்த உதவாக்கரை ஓவியத்தை சுற்றி நடந்து எட்டி நடை போட்டேன் ஏனோ வலியுடன். காதலை சொல்லுவதில்தான் எத்தனை ரகம் அதில் இது ஒரு தனி ரகம். ஆணின் காதல் அவள் தன் ஆடை களையும் வரை பெண்ணின் காதல் அவன் அவள் ஆடை களையும் வரை இதை உரக்கச் சொன்னால் உதைக்க வருவார்கள் தாங்கள் உண்மைக்காதலர்கள் என இந்த உலகத்திற்கு உரத்துச் சொல்பவர்கள். உள்ளத்தில் உதித்த இந்த எண்ணத்தில் அங்கே உறைந்திருந

மொட்டை மரம்.....

Image
இது புத்தனுக்கு ஞானம் தந்த போதி மரம் அல்ல கமலஹாசனும் ஸ்ரீதேவியும் கட்டிப் பிடித்து சுற்றிப்பாடி காதல் செய்த காதல் மரமும் அல்ல. எங்கே நண்பா உன் இலைகள்? ஊருக்கே வசந்தகாலம் உனக்கு மட்டுமேன் இறந்தகாலம்? உன் மொட்டைக் கிளைகளில் பச்சை இலைகளும் பவளப்பூக்களும் நான் பார்க்கும் நாள் நாளை வருமா? இன்றைய இரவின் தனிமையில் இறைவனை கேட்கிறேன் உனக்கும் இறக்கும் காலம் வந்துவிட்டதா என. நாளை நான் அவ்விடம் வரும்போது மறக்காமல் கேள் என இதயத்தில் இறை சொன்ன சேதி எதுவென எதுவாய் இருந்தாலும் எதார்த்தமாய் ஏற்றுக்கொள். கவலை வேண்டாம் நண்பனே இலைகளே இல்லை என்றாலும் நீ இறக்கும் காலமும் இதுவே என்றாலும் உன் இறுதிவரை கம்பீரமாகத்தான் நீ இருக்கப் போகின்றாய்.

என் மகள்...........

Image
பூவை போல நான் பொத்தி பொத்தி வளர்த்த என் மகள் அவள் பதினாறு வயதில் பருவம் எய்தினாள் அன்று அவள் குமரியானாள் நானோ குழந்தையானேன். இத்தனை நாட்கள் குழந்தை தூங்கிய என் தோள்களில் அன்று என் கைகள் மட்டும் என்னையே அணைத்தவாறு. இத்தனை நாள் என் வானில் முழு நிலவாய் நித்தமும் முகம் காட்டியவள் அவள் பதினெட்டு வயதில் பட்டணத்திற்கு படிக்கப் போனாள் சொர்க்கம் போலவும் இருந்த வீடு சுடுகாடு போல அமைதியானது சுருட்டி எரிந்த காகித குப்பையாய் என் வீட்டின் ஓரத்திலேயே நான் முடங்கிப்போனேன் உண்பதையும் உறங்குவதையும் உயிர்வாழ செய்து வந்தேன். எப்போதோ வீசும் தென்றல் காற்றின் இதம் அவ்வப்போது அவள் வந்து போகும் அந்த நாட்களில் மட்டுமே. ஓர் நாள் வந்தது .... அமெரிக்கா மாப்பிள்ளை அழகாய் இருந்தான் அவனை கட்டிக் கொண்டு கண்ணீருடன் அவள் பறந்து போனாள். ஏதும் புரியாத நான் எதாவதொருநாள் அவள் என்னிடம் வருவாள் என எண்ணியிருந்தேன். என்ன புரிந்ததோ என் மனைவிக்கு கண்களில் கண்ணீருடன் கவலையாய் எனை பார்த்தாள். அடுத்த இரு வருடங்கள் என் எஞ்சிய வயதை மொத்தமாய் தின்றது பொத்தி பொத்தி நான் வளர்த்த என் பூ மகள் முகம் பார்க்க உயிர் மட்டும் என் உடலோடு நின

தந்தையும் தாயும்....

Image
மண்ணின் மீது விண்ணின் சொர்க்கம் காண முதுகெலும்பு வளைத்து தாயின் காலடி வரை தலை குனிய வேண்டியதில்லை நிமிர்ந்த நிலையிலேயே ஆண் அவன் தன் ஆணவம் தவிர்த்து தன் உயிருக்கு உயிர் தந்த தந்தையவன் தளர் தோள்களை அன்போடு தொட்டாலே போதும். மனையவன் உயிர் தன் கரு தாங்கி, காத்து அவன் உயிருக்கு ஓர் வடிவளித்து சரியான காலம் வந்ததை வானத்து தேவதைகள் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து சொன்னதும் உயிரை எடுக்கும் வலி பொருத்து அவன் உயிரின் உயிரை அவன் கைகளில் உயிரோடு தவழ செய்யும் "அன்னையும், அந்த பிதாவும் முன்னெறி தெய்வம்" என்பதில் இங்கே வினா ஏது வியப்பும் தான் ஏது.

ஒரு மாலை நேரத்து மயக்கம் ......

Image
சிலு சிலு காற்றிலே சின்னதாய் ஒரு சிணுங்கல் சிணுங்கலில் சிணுங்குது உன் பாதக் கொலுசு. வழிந்தோடும் வாய்க்காலில் சிதறி ஓடும் தண்ணீராய் உன் சிரிப்பின் சில்மிஷம். மயக்கும் மாலையின் மேற்கு வானில் மெல்ல மறையும் மாலை கதிரவன் மறையும் போதும் மறக்காமல் நீல வானமெங்கும் அது சிந்திப்போன வண்ணங்கள் வண்ணங்களில் மெல்லப் பூக்குது உன் தாவணிப்பூ. உள்ளத்தில் உனை சுமந்து நினைவினில் உனை கலந்து நான் கடந்தது பல மைல் கல். இமைகளை சட்டென தொட்டது நீர்த்துளி வண்ணங்களில் கரைந்தபடி வந்தது மழைச்சாரல் மழைச்சாரலில் நனைந்தபடி வந்தது உன் மல்லிகைபூவின் மணம் மழையிலும் அந்த மணத்திலும் மயங்கிப்போனது என் மனம் மாலை நேரத்து அந்த மயக்கம் இரவினில் கெடுத்தது என் உறக்கம்.

தேடித் தேடி .........

Image
இதைத் தேடி, அதைத் தேடி, இங்கே தேடி, அங்கே தேடி, எதையெதையோ தேடி, எல்லாவற்றையும் தேடி,  எங்கெல்லாமோ தேடி, எங்கெங்கும் தேடி இப்படி தேடித் தேடி நான் சேர்த்த என் தேடல்களை எல்லாம் ஆற்றங்கரையில் ஆற அமர உட்கார்ந்து என்னிப் பார்க்கையில், எண்ணி எண்ணி பார்க்கையில் அத்தனை தேடல்களும் அணி சேர்ந்து இதற்குத்தானா ஆசைபட்டாய் இத்தனை தேடல் போதுமா இனியும் தேடல் வேண்டுமா என எகத்தாளமாய் சிரித்தன. நய்யாண்டி தாங்காத நான் எதையும் தேடா இன்ப வாழ்வு இனி வேண்டுமென அதைத் தேடி புறப்பட்டேன். இந்தத் தேடல் எப்போது முடியும் என நான் அறியேன் என் பராபரமே.

தேடல்....

Image
இந்த வாழ்க்கையே ஒரு தேடலா? இல்லை ஒரு தேடலே இந்த வாழ்க்கையா? தேடல் இருந்த காலத்தை இப்போது தேடித் தேடிப் பார்க்கிறேன். அன்றைக்கு....  தேடல்களே என் தேவைகள். இன்றைக்கு.... தேவை என்னவென்பதே என் தேடல்கள். தேடித் தேடியே தேடல் தொலைந்து போனதா? தேடல் தொலைந்ததால் தேவை தொலைந்ததா? தேவையை தொலைத்ததால் வந்ததா தெளிதல்? தெளிந்ததால் தொலைந்ததா தேடல்? இல்லையேல் தேவையை தொலைத்து, தேடலை தவிர்த்து வந்ததா இந்த தெளிதல்? தேடித் தேடி நான் கற்ற விஷயங்கள் பல. தேடித் தேடி நான் பெற்ற அனுபவங்கள் சில. தேடித் தேடி கற்றதும் பெற்றதுமாய் எதையோ எனக்குள்ளே தோண்டித் தோண்டி கொஞ்சம் தெளிந்தேனா இல்லை முற்றும் தொலைந்தேனா? என்னை அறிந்தவர் எவரேனும் இங்குண்டா? இல்லை நான் அறிந்தவர் எவரேனும் அங்குண்டா? எவரேனும் அறியாமல் என்னை அறிவது எங்கனம்? என்னை அறியாமல் எவரேனும் அறிவதும் எங்கனம்? தேடித் தேடி தொலைத்ததை இனியும் நான் ஏன் தேடி த்  தொலைக்கணும் ? இப்படி வார்த்தைகளை ஏன் வரிகளில் தொலைக்கோணும்?

இறைவன்......

Image
"சிவனும் அரியும் ஒன்னு... அதை அறியாதவன் வாயிலே மண்ணு" சிவனென்றும் தனித்தில்லை அரியென்றும் தனித்தில்லை ஒன்றே குலம், ஒருவனே தேவன் இதை அறியாதவன் வாயிலும் மண்ணு, வயித்திலும் மண்ணு, மண்டையிலும் மண்ணு, மண்ணிலும் மண்ணு சரியான களிமண்ணு. ஒன்று ஒன்றோடும் இல்லை ஒன்று மற்றோடும் இல்லை அந்த வானும் இல்லை இந்த மண்ணும் இல்லை சுட்டெரிக்கும் சூரியனும் இல்லை சுகம் கொடுக்கும் சந்திரனும் இல்லை நீயும் இல்லை நானும் இல்லை நம் அப்பனும் இல்லை நம் ஆயியும் இல்லை எல்லாமும் இல்லை எங்கெங்கும் இருப்பவனும் இல்லை மண்டை ஓட்டுக்குள்ளே மறைந்து கிடக்கும் மனித மூளை இல்லை நெஞ்சுக்கூட்டுக்குள்ளே நைந்துகிடக்கும் இருதயமும் இல்லை இண்முகமும் நற்குணமும் கூட அவனில்லை அவையிரெண்டும் இறைத்தன்மை ஆயினும் அறிவாய் நீ இறைத்தன்மை இறையாகா என்பதனை அவனிடத்தில் இருப்பவனே அவன் அங்கிருந்து எங்கும், எதனையும் உன்னையும், என்னையும் அவனையும், அவளையும் அதனையும், அனைத்தையும் அறிபவனே இறைவன் நாய்க்குணமும், நரிமுகமும் அகத்திலே நற்குணமும், இன்முகமும