தேடல்....


இந்த வாழ்க்கையே ஒரு தேடலா?

இல்லை ஒரு தேடலே இந்த வாழ்க்கையா?


தேடல் இருந்த காலத்தை

இப்போது தேடித் தேடிப் பார்க்கிறேன்.

அன்றைக்கு.... 

தேடல்களே என் தேவைகள்.

இன்றைக்கு....

தேவை என்னவென்பதே என் தேடல்கள்.


தேடித் தேடியே தேடல் தொலைந்து போனதா?

தேடல் தொலைந்ததால் தேவை தொலைந்ததா?


தேவையை தொலைத்ததால் வந்ததா தெளிதல்?
தெளிந்ததால் தொலைந்ததா தேடல்?

இல்லையேல் தேவையை தொலைத்து,

தேடலை தவிர்த்து வந்ததா இந்த தெளிதல்?


தேடித் தேடி நான் கற்ற விஷயங்கள் பல.

தேடித் தேடி நான் பெற்ற அனுபவங்கள் சில.

தேடித் தேடி கற்றதும் பெற்றதுமாய்

எதையோ எனக்குள்ளே தோண்டித் தோண்டி

கொஞ்சம் தெளிந்தேனா

இல்லை முற்றும் தொலைந்தேனா?


என்னை அறிந்தவர் எவரேனும் இங்குண்டா?

இல்லை நான் அறிந்தவர் எவரேனும் அங்குண்டா?


எவரேனும் அறியாமல் என்னை அறிவது எங்கனம்?

என்னை அறியாமல் எவரேனும் அறிவதும் எங்கனம்?


தேடித் தேடி தொலைத்ததை

இனியும் நான் ஏன் தேடித் தொலைக்கணும் ?

இப்படி வார்த்தைகளை ஏன் வரிகளில் தொலைக்கோணும்?

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?