விலைமாதர்கள்.....

விலைமாதர்களை தயைகூர்ந்து வெறுப்போடு பார்க்காதீர்கள்
உள்ளத்தை தொடுபவன் 
உள்ளூரிலும், வெளியூரிலும், எவ்வூரிலும் இல்லையெனின்
பெண்சிலை கூட தான் கன்னியாக இருப்பதைத்தான் கடைசிவரை விரும்பும்.

உடலை மட்டும் தொடுபவனை 
பெண் எப்போதும் மனதால் தொடுவதில்லை
மனதை தொடுபவனையோ 
பெண் மரணம் தாண்டியும் மறப்பதில்லை.

வித்துப்பிழைக்காமல் செத்து தொலையலாமே என்பவர்களுக்கு 
சாவு பற்றி என்ன தெரியும்?
கவலை வேண்டாம் கண்ணியமான பெண்களுக்கும் ஆண்களுக்கும்
தொட்டுச் செல்லும் எத்தனையோ பேரில் எவனேனும் ஒருவன்
அவன் மனதை அவளுக்கென விட்டுச் செல்லமாட்டானா என்ன?

அப்படி நேர்ந்தால்....
அந்த வினாடியே வித்துப் பிழைக்காமல் அவளே செத்துப் போவாள்
அதுவரையிலும்....
விலைமாதர்களை தயவுசெய்து யாரும் வெறுப்போடு பார்க்காதீர்கள்.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?