காதல்....

சிணுங்கியது தொலைபேசி
எடுத்து அதன் வாய்க்கு என் காதினை கொடுத்தேன்.
மறு முனையில் நண்பர்
காதல் குறித்து சட்டென ஒரு கவிதை கேட்டார்.

ஊரெங்கும் அனல் அடித்தாலும்
உள்ளுக்குள்ளே மழை அடிக்க வைக்கும் அதிசயம்
"ஐய்யோ!!!" என அதிர வைக்கும் அவசியம்
ஒரு வலி குறைத்து
மறு வலி வளர்க்கும் மாமருந்து
உள்ளத்தில் இது உதித்து விட்டாலோ
உவர்க்கும் ஊறுகாய் கூட
இங்கே ஆகும் ஓர் விருந்து
என்று முடித்தேன்.

எதிர் முனையில் மௌனம்
என்ன நினைச்சாருன்னு நேக்கு புரியல்லே
இனி கவிதை கேட்டு மறுபடியும் அழைப்பரா என்றும் தெரியல்லே.

Comments

Popular posts from this blog

விபரீத விளையாட்டு

மனிதர் புரிந்து கொள்ள.....

வாராயோ என் தோழி வாராயோ?