என் காதலி ......



அழகான பூக்களும் நீயே
அமைதியான நீல வானமும் நீயே
ஆர்ப்பரிக்கும் அலை கடலும் நீயே
என் இதயம் தொடும் இசையும் நீயே
அந்த இசையே தொழும் இன்னிசையும் நீயே
தனிமை தராத இனிமையும் நீயே
என்றும் இனிமை கெடாத இளமையும் நீயே
ஆன்மாவை ஆளும் ஆலயமும் நீயே
அறிவு தேடும் என் வாழ்வின் அர்த்தமும் நீயே
உறக்கம் கலைக்கும் உதயமும் நீயே
இமைகளை மூடும் நல் இரவும் நீயே
நினைவில் நிற்கும் நிலமகளும் நீயே
கனவில் கலக்கும் கலைமகளும் நீயே
என்னை தாலாட்டும் என் தாய் மடியும் நீயே
என் உயிரோடு உறவாடும் உருவகமும் நீயே
என் மனம் மயக்கும் மல்லிகை மணமும் நீயே
என் குணம் உயர்த்தும் குலமகளும் நீயே
என் வானத்தில் எப்போதும் கண்சிமிட்டும் விண்மீனும் நீயே
என் வனத்தில் என்றும் வண்ணத்துப்பூச்சியாய் வலம் வருவதும் நீயே
என் தூரிகையில் வழிந்தோடும் ஓவியமும் நீயே
என் யாழிசையில் வளைந்தாடும் நாட்டியமும் நீயே
எல்லாம் நீயே, எங்கும் நீயே,
என்னுள்ளும் நீயே, என்னவளும் நீயே,
என்னுயிரும் நீயே, எனை ஆளும் மண்ணவளும் நீயே
வாழிய நீயே என்றுன்னை என்றும் வாழ்த்துகிறேன் நானே

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?