தந்தையும் தாயும்....
மண்ணின் மீது விண்ணின் சொர்க்கம் காண
முதுகெலும்பு வளைத்து
தாயின் காலடி வரை
தலை குனிய வேண்டியதில்லை
நிமிர்ந்த நிலையிலேயே
ஆண் அவன் தன் ஆணவம் தவிர்த்து
தன் உயிருக்கு உயிர் தந்த
தந்தையவன் தளர் தோள்களை
அன்போடு தொட்டாலே போதும்.
மனையவன் உயிர் தன் கரு தாங்கி, காத்து
அவன் உயிருக்கு ஓர் வடிவளித்து
சரியான காலம் வந்ததை
வானத்து தேவதைகள்
விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து சொன்னதும்
உயிரை எடுக்கும் வலி பொருத்து
அவன் உயிரின் உயிரை
அவன் கைகளில் உயிரோடு தவழ செய்யும்
"அன்னையும், அந்த பிதாவும் முன்னெறி தெய்வம்"
என்பதில் இங்கே வினா ஏது
வியப்பும் தான் ஏது.
Comments
Post a Comment