என் மகள்...........



பூவை போல நான் பொத்தி பொத்தி வளர்த்த என் மகள்
அவள் பதினாறு வயதில் பருவம் எய்தினாள்
அன்று அவள் குமரியானாள் நானோ குழந்தையானேன்.

இத்தனை நாட்கள் குழந்தை தூங்கிய என் தோள்களில்
அன்று என் கைகள் மட்டும் என்னையே அணைத்தவாறு.

இத்தனை நாள் என் வானில் முழு நிலவாய்
நித்தமும் முகம் காட்டியவள்
அவள் பதினெட்டு வயதில் பட்டணத்திற்கு படிக்கப் போனாள்
சொர்க்கம் போலவும் இருந்த வீடு
சுடுகாடு போல அமைதியானது
சுருட்டி எரிந்த காகித குப்பையாய்
என் வீட்டின் ஓரத்திலேயே நான் முடங்கிப்போனேன்
உண்பதையும் உறங்குவதையும் உயிர்வாழ செய்து வந்தேன்.

எப்போதோ வீசும் தென்றல் காற்றின் இதம்
அவ்வப்போது அவள் வந்து போகும் அந்த நாட்களில் மட்டுமே.

ஓர் நாள் வந்தது ....
அமெரிக்கா மாப்பிள்ளை அழகாய் இருந்தான்
அவனை கட்டிக் கொண்டு கண்ணீருடன் அவள் பறந்து போனாள்.

ஏதும் புரியாத நான்
எதாவதொருநாள் அவள் என்னிடம் வருவாள்
என எண்ணியிருந்தேன்.

என்ன புரிந்ததோ என் மனைவிக்கு
கண்களில் கண்ணீருடன் கவலையாய் எனை பார்த்தாள்.

அடுத்த இரு வருடங்கள் என் எஞ்சிய வயதை மொத்தமாய் தின்றது
பொத்தி பொத்தி நான் வளர்த்த என் பூ மகள் முகம் பார்க்க
உயிர் மட்டும் என் உடலோடு நின்றது.

இனி இது தாங்காது என மருத்துவர்கள் சொல்லிப்போன அந்த நாளில்
அமெரிக்கா அழகாய் இருப்பதாகவும்
அங்கேயே நிரந்தரமாய் தங்கிவிட முடிவெனவும்
வசதி படும் போது வந்தவாசி வருவதாகவும்
கடுதாசியில் மகளின் இருவரிகளும்
கூடவே மருமக பிள்ளையின் தோளில் தவழ்ந்தபடி
மகளின் மகளின் ஓரிரு போட்டாக்களும்.

அன்றைய இரவின் கனவில்
என் தோழில் சாய்ந்தபடி தூங்கினாள் என் மகளின் மகள்
நான் தூங்கியே போனேன்
அது விடியலே காணாத நெடுந்தூக்கம்.

இதுநாள் வரை இயங்கிய இதயம் நின்றது;
உடலில் ஊசலாடிய உயிர்
உடல் பிரிந்து காற்றோடு கலந்தது
அமெரிக்கா திசையில் அதற்கோர் அசுர பயணம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?