இறைவன்......



"சிவனும் அரியும் ஒன்னு...

அதை அறியாதவன் வாயிலே மண்ணு"
சிவனென்றும் தனித்தில்லை
அரியென்றும் தனித்தில்லை
ஒன்றே குலம்,
ஒருவனே தேவன்
இதை அறியாதவன்
வாயிலும் மண்ணு,
வயித்திலும் மண்ணு,
மண்டையிலும் மண்ணு,
மண்ணிலும் மண்ணு சரியான களிமண்ணு.
ஒன்று ஒன்றோடும் இல்லை
ஒன்று மற்றோடும் இல்லை

அந்த வானும் இல்லை
இந்த மண்ணும் இல்லை
சுட்டெரிக்கும் சூரியனும் இல்லை
சுகம் கொடுக்கும் சந்திரனும் இல்லை
நீயும் இல்லை
நானும் இல்லை
நம் அப்பனும் இல்லை
நம் ஆயியும் இல்லை
எல்லாமும் இல்லை
எங்கெங்கும் இருப்பவனும் இல்லை
மண்டை ஓட்டுக்குள்ளே
மறைந்து கிடக்கும் மனித மூளை இல்லை
நெஞ்சுக்கூட்டுக்குள்ளே
நைந்துகிடக்கும் இருதயமும் இல்லை
இண்முகமும் நற்குணமும் கூட அவனில்லை
அவையிரெண்டும் இறைத்தன்மை
ஆயினும் அறிவாய் நீ இறைத்தன்மை இறையாகா என்பதனை
அவனிடத்தில் இருப்பவனே அவன்
அங்கிருந்து எங்கும், எதனையும்
உன்னையும், என்னையும்
அவனையும், அவளையும்
அதனையும், அனைத்தையும் அறிபவனே இறைவன்

நாய்க்குணமும், நரிமுகமும் அகத்திலே
நற்குணமும், இன்முகமும் புறத்திலே
இதுதான் நீ, இதுதான் நான்
உன்னிடத்திலும், என்னிடத்திலுமா நம் இறைவன்?

தூணிலும் இருப்பான் இறைவன்,
துரும்பிலும் இருப்பான் இறைவன்,
கல்லிலும் இருப்பான் இறைவன்,
புல்லிலும் இருப்பான் இறைவன் என
"இனி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் 
இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே"

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?