தேடித் தேடி .........



இதைத் தேடி,
அதைத் தேடி,
இங்கே தேடி,
அங்கே தேடி,
எதையெதையோ தேடி,
எல்லாவற்றையும் தேடி, 
எங்கெல்லாமோ தேடி,
எங்கெங்கும் தேடி
இப்படி தேடித் தேடி நான் சேர்த்த
என் தேடல்களை எல்லாம்
ஆற்றங்கரையில் ஆற அமர உட்கார்ந்து
என்னிப் பார்க்கையில்,
எண்ணி எண்ணி பார்க்கையில்
அத்தனை தேடல்களும் அணி சேர்ந்து
இதற்குத்தானா ஆசைபட்டாய்
இத்தனை தேடல் போதுமா
இனியும் தேடல் வேண்டுமா என
எகத்தாளமாய் சிரித்தன.

நய்யாண்டி தாங்காத நான்
எதையும் தேடா இன்ப வாழ்வு இனி வேண்டுமென
அதைத் தேடி புறப்பட்டேன்.

இந்தத் தேடல் எப்போது முடியும்
என நான் அறியேன் என் பராபரமே.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?