மொட்டை மரம்.....





இது புத்தனுக்கு ஞானம் தந்த போதி மரம் அல்ல
கமலஹாசனும் ஸ்ரீதேவியும் கட்டிப் பிடித்து சுற்றிப்பாடி
காதல் செய்த காதல் மரமும் அல்ல.

எங்கே நண்பா உன் இலைகள்?
ஊருக்கே வசந்தகாலம்
உனக்கு மட்டுமேன் இறந்தகாலம்?
உன் மொட்டைக் கிளைகளில் பச்சை இலைகளும் பவளப்பூக்களும்
நான் பார்க்கும் நாள் நாளை வருமா?

இன்றைய இரவின் தனிமையில் இறைவனை கேட்கிறேன்
உனக்கும் இறக்கும் காலம் வந்துவிட்டதா என.
நாளை நான் அவ்விடம் வரும்போது மறக்காமல் கேள்
என இதயத்தில் இறை சொன்ன சேதி எதுவென
எதுவாய் இருந்தாலும் எதார்த்தமாய் ஏற்றுக்கொள்.

கவலை வேண்டாம் நண்பனே
இலைகளே இல்லை என்றாலும்
நீ இறக்கும் காலமும் இதுவே என்றாலும்
உன் இறுதிவரை கம்பீரமாகத்தான் நீ இருக்கப் போகின்றாய்.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?