அட போங்கய்யா ............
அறிவியல் சொல்லித்தரவேண்டிய அப்துல் கலாமின் வார்த்தைகளில்
அரசியல் நெடி...
மேடையில் இருந்து குதித்தும், பெண் உடையில் ஓடியும்
ஒளிய முயன்ற பாபா ...
அவருக்காக வக்காலத்து வாங்கும் விதமாக
அடையாள உண்ணாவிரதம் இருக்கும் அண்ணா ஹசாரே....
அலாக்காக தூக்கிக் கொண்டு போய்
அழுப்பே தெரியாமல் தனி விமானத்தில் ஹரிதுவாரா வரை
விட்டு வந்த அரசாங்கத்தின் அன்பை
"ஜாலியன் வாலாபாக்"கிற்கு இணையாக பேசும் பா.ஜா.க.
அடுத்த நாளே ஏதோ ஆட்சியையே பிடித்தாகிவிட்டது போ ல
ஆனந்தக் களியாட்டமாடிய அக்கட்சியின் அவைத்தலைவர் சுஷ்மா...
ஆனந்தக் களியாட்டமாடிய அக்கட்சியின் அவைத்தலைவர் சுஷ்மா...
மகனை ஆங்கிலப் பள்ளியிலே சேர்க்கமுடியாமல்
அனலை தன் மீது அள்ளி வீசிக்கொண்ட பைத்தியக்கார பெண்மணி
மாநிலத் தலைநகரின் மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடும் எக்மோரிலே,
சாக்கடைத் தண்ணீரிலே சப்பி போட்ட மாங்கொட்டையாய்
உயிர்போகும் நிலையில் என் தமிழன் ஒருவன்
அவனைப்பற்றி எள்ளளவும் கவலை இல்லாது
இப்போதும் ஈழத்து தமிழனுக்காய் நீலிக்கண்ணீர் வடிக்கும்
எங்கள் வைக்கோவும், விஜய லெட்சுமியின் செல்வச் சீமானும்.
இத்தனை நிகழ்வுகளுக்கு மத்தியிலும் ...
அரசாங்கம் ஆயிரமாயிரமாக வரிப்பணத்தை
வீணாக்கி கொண்டு போய்கொண்டே இருந்தாலும்
"ரானா" ஆரம்பம் செப்டேம்பரிலா , அக்டோபெரிலா என்பதிலேயே
கவனமும் கவலையும் கொண்ட தலைவனின் தொண்டர்கள்.
இந்த அரசாங்கத்திற்கு வோட்டும்,
முந்திய அரசாங்கத்திற்கு வேட்டு ம் போட்ட என் தமிழட்சியோ
மகனின் சமச் சீர் கல்விக்கு நேர்ந்த கொடுமை பற்றிய சிந்தனை ஏதும் இன்றி
போன அரசாங்கம் கொடுத்துவிட்டுப் போன வண்ணத் தொலைக்காட்சியில்
"ராசாத்தி என் உசுரு என்னதில்ல" என கருப்பு வெள்ளையில் கதறிக்கொண்டிருந்த கதாநாயகனை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே
அடுத்த அரசாங்கம் தந்த ௨௦ கிலோ அரிசியிலே புழுவும், பூச்சியும் போக
எத்தனை கிலோ தேறும் என்ற கவலையிலும்
வரவிருக்கும் இலவச மின்விசிறி, மிக்க்ஷி மற்றும் அரவை மெசினை
எங்கெங்கே வைக்கலாம் என்ற கனவிலும்
மூத்த மகள் திருமணத்திற்கு "அம்மா" தருவதாக சொல்லி இருக்கும்
அரை பவுன் தங்கத்திலே
அண்ணா நகரில் அரை கிரவுண்டு வாங்கி போட்டாலென்ன என்ற நினைப்பிலும்.
இந்த ரவுசுகள் அத்தனையும் போதாதென்று
இதோ இங்கே நானோ
ஊடங்கள் தங்கள் ஊடகங்களில் ஊடகமாகத் திரித்துப் போடும்
உதவாக்கரை செய்திகளை உண்மை என்று நம்பி
ஊரே உறங்கும் இந்த இரவிலே
அயர்ந்து தூங்க வேண்டிய இந்த அதிகாலை நேரத்திலே
வெட்டித்தனமாய், முக்கலும், முனகலுமாய்
என் முகநூலில் முகாந்திரம் பாடிக் கொண்டிருக்கிறேன்
"அட போங்கய்யா ............இது தேவையா....சூன், சூலையா"
என்று பக்கத்தில் சிச்சுவேஷன் சாங்கு வேறு.அட போடா டேய் ..................
Comments
Post a Comment