நடைபாதை காதல் ...........

காதலை சொல்லுவதில்தான் எத்தனை ரகம்
அதில் இது ஒரு தனி ரகம்.

எத்தனையோ கால்கள் நித்தமும் நடை போடும் நடை பாதையில்
தன் உள்ளத்தையும் அதில் அவள் பெயரையும்
ஓவியமாய் வரைந்து விட்டுப் போயிருக்கிறான்
எவனோ ஒரு ரோசியின் ராசா.

இந்த நடைபாதை காதலை கண்டு என் உள்ளம் உருகவில்லை
இப்படி தன் காதலை களங்கப்படுத்தி போயிருக்கும் அந்த காதல் கள்வனை
கண்டுபிடித்து கண்ட துண்டமாய் வெட்டிப்போட உள்ளம் துடித்தாலும்
"அய்யோ பாவம்" என்ற எண்ணத்தையும் ஏனோ தவிர்க்க இயலவில்லை.

அவனின் ரோசியின் காந்த கண்களில் படும்வரையிலாவது
இந்த காதல் காவியம் இருந்து தொலையட்டுமென
ஏறி நடக்கப்போன என் கால்களை எப்படியோ கட்டுப்படுத்தி
உள்ளத்தில் பீறி வந்த துக்கத்தை துச்சப்படுத்தி
இந்த உதவாக்கரை ஓவியத்தை சுற்றி நடந்து
எட்டி நடை போட்டேன் ஏனோ வலியுடன்.

காதலை சொல்லுவதில்தான் எத்தனை ரகம்
அதில் இது ஒரு தனி ரகம்.

ஆணின் காதல் அவள் தன் ஆடை களையும் வரை
பெண்ணின் காதல் அவன் அவள் ஆடை களையும் வரை
இதை உரக்கச் சொன்னால் உதைக்க வருவார்கள்
தாங்கள் உண்மைக்காதலர்கள் என
இந்த உலகத்திற்கு உரத்துச் சொல்பவர்கள்.

உள்ளத்தில் உதித்த இந்த எண்ணத்தில்
அங்கே உறைந்திருந்த வலி உருகி
என் உதடுகளில் புன்னைகை பூவாய் பூக்க
எட்டி நடை போட்டேன்.

காதலில்லா என் உள்ளத்தில்
எத்தகு வலியும் அங்கில்லை
ஏதேனும் எண்ணம் எதுவுமில்லை.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?