மரணமா, மயக்கமா?


வெறும் மயக்கம்தான்
மரணமில்லை என்று எண்ணத் தோன்றும்
உற்றுப்பார்க்கையில் உணர முடியும் உறைய வைக்கும் உண்மை
மரணம்தான் மயக்கமில்லை.

எதனால் நேர்ந்தது?
எதன் மீதும் மோதியதாகத் தெரியவில்லை
எவராலும் அடித்து வீழ்த்தப்பட்டதாகவும் தெரியவில்லை.

நேற்றுவரை 
விண்ணிலே உயர உயர பறந்த உன் இறகுகள்
இன்று 
மண்ணிலே எறும்புக்கு இரையாக போனது ஏனோ?
வயது உன்னை வாழவிடவில்லையா?
இல்லை இறைவன் ஆணைப்படிதான் இறந்து போனாயோ?

உன் மரணம் என்னை உறைய வைக்குது
என் உயிரையோ உருக்குலைந்து உருக வைக்குது.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?