ஆடம் ஆப்பிளும் ....ஆலகால விஷமும்
அவனுக்குத் தெரியாதா ஆலகால விஷம் அவளென்றே இருந்தும் ஏன் விழுங்கினான் அலறிப் புடைத்து ஓடி வந்து சங்கைப் பிடிப்பாள் விழுங்கிய நஞ்சு இரைப்பைக்குள் வீழாமல் தொண்டைக் குழியில் காலத்திற்கும் சுற்றித் திரியட்டும் என்கிற திட்டமோ அப்பாவி குரல் பெட்டி அவன் விட்ட கதையில் ஆடம் ஆப்பிள் ஆனது இவன் விட்ட கதையில் ஆலகால விஷம் ஆனது ஆணின் குரலாக பெண் அவனுக்கு ஆடம் ஆப்பிள் பெண்ணின் குரலாக ஆண் அவளுக்கு ஆலகால விஷம் என்று எப்போதடா புதுக்கதை விடப் போகிறீர்கள்? எக்கேடோ கெட்டுத் தொலையுங்கள் நீங்கள். பக்கோடா சாப்பிட பறந்த...