காலமெல்லாம் காதல் வாழ்க....
நிலவை இழந்த வானம் இருண்டது
மழையை இழந்த மேகம் வெளிர்த்தது
உன்னிடத்தில் தன்னை இழந்த என் மனமோ
ஒளிர்ந்தது; சிலிர்த்தது.
இழப்பென்பது இங்கில்லை
பெறுகையில் பிரமிப்பு
கொடுக்கையில் கொண்டாட்டம்
கொடுப்போம்..
கொடுத்தலை கொண்டாடுவோம்.
பெறுவோம்....
பெற்றதை போற்றுவோம்.
அன்பிற்காக அன்பினால்
உள்ளம் தலைப்படுகையில்
பண்பினால் அது பண்பட்டு
நம்மை கேட்பவர் செவிகளில்
மீட்டும் இனிய சங்கீதம்;
நம்மை பார்ப்பவர் விழிகளில்
விரிக்கும் பரவசப் புல்வெளி.
கொண்டாடி கொடுப்போம்
போற்றிப் பெறுவோம்.
அன்பினால் தலைப்பட்டு,
பண்பினால் பண்பட்டு
இசைப்போம் இனிய சங்கீதம்;
பரப்புவோம் பரவசப் புல்வெளி.
"காலமெல்லாம் காதல் வாழ்க"
Comments
Post a Comment