சுப்ரபாதம் ......
வண்ண மலர்களை கொண்டு
நித்தமும் சுப்ரபாதம் சொல்லும்
சூப்பர் பரதம் நீ
உன் சொல்லிலும், செயலிலும்
எத்தனை நளினம்
எத்தனை நயனம்
பரதம் புரிகிறதோ இல்லையோ
உன் சொல்லும் செயலும்
நீ சொல்வதை விடவும்
நீ செய்வதை விடவும்
தெளிவாகவே புரிகிறது
நீ சொல்வதும் செய்வதும்
உனக்கே புரிந்ததை விடவும்
நீ யோசிப்பதை நான் நேசிக்கிறேன்
நீ நேசிப்பதை நான் யோசிக்கிறேன்
அடுத்த கட்டம் நகர எனக்கு எண்ணமும் இல்லை
எண்ணமில்லாததால் எந்த அவசரமும் இல்லை
நிகழ்த்துவது நானென்றால்தானே
அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்த
ஆர்வம் இருக்கும் எனக்கு
நடப்பது நடக்கட்டும் கிடைப்பது கிடைக்கட்டும்
நான் ரொம்ப தெளிஞ்சவன்டா
இருக்குற வரையிலும் எது வந்த போதிலும்
ஏத்துக்க தெரிஞ்சவன்டா
👏👏👌
ReplyDelete