உரக்க கத்துது கோழி.....
பெட்டைக் கோழி உரக்க கத்தியது கேட்டு
மோகத்தில் வேகமாய் நெருங்கிய
வெட்கங் கெட்ட கொண்டைச் சேவலை
வலியின் வெறியோடு
எட்டி உதைத்தது பெட்டைக் கோழி.
பெட்டைக் கோழிகள் எல்லாம்
எட்டி உதைக்கப் பழகி விட்டால்
கொண்டைச் சேவல்கள்
புரிந்து கொள்ளும்
உரக்க கத்துதல்
கூடலுக்கு மட்டுமே இல்லை என்பதை.
கொண்டைச் சேவல்களே...
உரக்க கத்துது கோழி
அதற்கு வலிக்கையில் நெருங்குங்கள்
ஆறுதலோடு.
அது கிரங்கையில் நெருங்குங்கள்
காதலோடு.
கொண்டைச் சேவல்களே....
ஒரு உண்மை சொல்கிறேன் கேளுங்கள்:
காமம் என்று தனித்தில்லை
காதலின் உச்சம் சிறு காமம்.
ஆகையால்....
காமம் தவிர்த்து காதல் பெருக்குங்கள்.
இல்லையேல்....
உங்கள் கொண்டை நசுங்க
வெறியோடு எட்டி உதைக்கும்
எங்கள் பெட்டைக் கோழிகள்.
நினைவில் இருக்கட்டும்
இவை பெட்டைக் கோழிகள்.
பொட்டைக் கோழிகள் அல்ல.
Amazing!🥰👌
ReplyDelete