டமால் ...டுமீல் ...திடும்....டுடும்
டமால் ...டுமீல் ...திடும்....டுடும்
வெடிச்சத்தம் வீட்டிற்கு வெளியே
சில்...சில்..சல்...சல்
சந்தோச சங்கீதம் வீட்டினுள்ளே
ஊரெங்கும் திருவிழா
ஆராவாரமாய்
உள்ளுக்குள் அன்புப் பெருவிழா
அமைதியாய்
வெளியே ஓடினேன்
உள்ளம் ஆராவாரமாயிற்று
உள்ளே திரும்பினேன்
உள்ளம் அமைதியாயிற்று
வெளியே ஓடினேன்
ஆராவாரம்
உள்ளே திரும்பினேன்
அமைதி
வெளியே ஓடினேன்
உள்ளே திரும்பினேன்
வெளியே ஓடினேன்
உள்ளே திரும்பினேன்
ஆராவாரம்
அமைதி
ஆராவாரம்
அமைதி
கனப்பொழுதில்
தன்னிலை மாற்றிக் கொள்ளும்
இந்த வித்தை
எப்போது பழகிற்று என் மனம்?
ஆச்சர்யம், ஆனந்தம்.
டமால் ...டுமீல் ...திடும்....டுடும்
வெடிச்சத்தம் வெளியே;
சில்...சில்..சல்...சல்
சந்தோச சங்கீதம் எனக்குள்ளே.
Comments
Post a Comment