ஏற்றமும் ...இறக்கமும்.....

                                                                         


மூச்சு முட்ட மேலேறி

உச்சம் தொட்டு, 

அச்சம் தவிர்த்து,

ஓஓ... ஊஊ...எனவே 

உற்சாக கூக்குரலுடன்   

சர்ரென சறுக்கி  

தட்டென தரை தொட்டு 

வெற்றிக் களிப்புடனே உச்சம் பார்க்கையில்..... 


மீண்டும் மீண்டும் 

மூச்சு முட்ட படிகளேறி 

உச்சம் தொட்டு, 

அச்சம் தவிர்த்து, 

சர்ரென சறுக்கி,

தட்டென தரை தொட 

பிறக்கிறது ஆசை. 


ஏற்றமும் இறக்கமும் இன்றி ஏது இல் வாழ்க்கை?

ஏற்றமும் இறக்கமும் தானே நல் வாழ்க்கை? 

உற்சாக உள்ளத்திற்கு 

ஏற்றம் எளிது 

இறக்கம் இனிது.


உற்சாக உள்ளம் கொள்க. 

ஏறி இறங்கி, 

ஏறி இறங்கி எனவே 

எளிய வாழ்க்கை 

இன்பமாய் வாழ்க.


ஏற்றத்தில் இறுமாப்பின்றி 

இறக்கத்தில் கழிவிரக்கமின்றி 

வருவோரை வரவேற்று 

செல்வோரை வாழ்த்தி வழியனுப்பி

வளங்கள் பெற்று, 

வழங்கல் உற்று, 

பெற்றது அற்று, 

அற்றதால் மேலும் பெற்று  

நீண்ட நெடுங்காலங்கள் 

அன்புடன், பண்புடன்  

அமைதியுடன், ஆனந்தத்துடன்

என் இனியவர் நீவீர் அனைவரும்

வைய்யத்துள் வாழ் வாங்கு

வாழிய வாழியவே!  


Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?