Posts

Showing posts from January, 2012

அன்பே சிவம் ......இறை நேசம்

Image
இறை நேசம்.....கற்பனை நண்பருடன் என்னுடைய உரையாடலும் அதற்கான என்னுடைய தொடர் விளக்கமும்: நண்பர்:  இறை நேசம் என்றால் என்ன? நான்:    இறை நேசம் என்றால் உங்களுடைய நேசத்தில் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் எல்லோரையும் நேசிப்பது நண்பர்:  எல்லோரையும் எப்படி வேறுபாடு இல்லாமல் நேசிக்க முடியும்? நான்:  எல்லோரையும் எந்த வேறுபாடும் இல்லாமல் நேசிக்க முடிவதனால்தான் அதை இறை நேசம் என்கிறோம். இறைவன் அப்படிதானே நம்முடைய எல்லோருடைய குறைகளையும் மீறி நம் எல்லோரையும் ஒரே மாதிரியாக நேசிக்கிறான் நண்பர்:  இறை நேசம் எனக்கு இருக்கிறது என்பதை நான் எப்படி அறிவது? நான்:  என்றைக்கு உங்களிடம் இருக்கும் குறைகளை மறந்து உங்களை உங்களால் நேசிக்க முடிகிறதோ, என்றைக்கு உங்களின் வாழ்க்கையில் இருப்பவர்களின் குறைகளை மறந்து அவர்களையும் நீங்கள் உங்களை நேசிக்கும் அளவிற்கு நேசிக்க முடிகிறதோ அப்போது உங்களுக்கு இறை நேச குணம் இருப்பதாக கொள்ளலாம்  நண்பர்:  குறைகள் இருக்கும் என்னிடம் இறை நேசம் வர முடியுமா? நான்:  இறை நேசம் வந்துவிட்டால் குறைகள் குறைந்து, குறைந்து...

மழைக்கால மத்தியான வேளை.........

Image
மழைக் கால  நாட்களில்   சட்டென்று  இருட்டிக் கொண்டு மழை பொழியத்  துவங்கும்   மத்தியான வேளை என்பது   மனதிற்குப் பிடித்த பெண்ணுடன் அமர்ந்து  இளையராஜா இசையோடும்  இதமான தேநீரோடும்  இணையில்லா புத்தகங்களோடும்  இருவர் மனதிற்கும் பிடித்த விசயங்களை  மனம் விட்டு மணிக் கணக்கில் பேசிக் கொள்வதைப்  போல   அத்தனை சுகமாய் இருக்கிறது.  இருப்பது போலத்  தோன்றுகிற  என் ஆண் நண்பர்களின் அருகாமை   என் அறிவுக்குப் பிடித்தம் ;  இருக்கிறார்களா என்று தெரியாத  என் பெண் நண்பர்களின் அருகாமை   என் ஆன்மாவிற்குப் பிடித்தம்.  மனையவளே மனதிற்குப் பிடித்து விட்ட   உயிர் தோழியாகவும் அமைந்து விட்டால்   அதனினும் சுகமும் வேறில்லை  அதனினும் சௌகரியமும்...

காதல் ............

Image
நேற்று..... இல்லாத ஒன்று நமக்கெதற்கு என்று  காசுக்காக காதல் பற்றி எழுதிய  காகிதப் பதிவை கசக்கி எறிந்து விட்டேன்  இன்று......... எதைப் பற்றியோ  எத்தனையோ முறை  எழுத முயற்சித்தும்  எதையும் எழுத முடியாமல்  கசக்கி எறிந்த காகித குப்பைக்கு நடுவே  கசங்காத புன்னகையுடன் நான்.  என்னை ப் போல வே  சோம்பேறியாய்  விலகிப்போகவே விருப்பமில்லாமல்  என்னையும் இரவையும் சேர்த்துப்  போர்த்தி இருந்த  பனிப் போர்வை கலைந்து கொண்டிருந்த  இன்றைய காலைப் பொழுதில் இந்த விபத்து எனக்கு நேர்ந்தது. விபத்திற்கு காரணம்.................. வந்தது தெரிந்திருந்தும்  வரவே வராதது போல  காட்டிக் கொள்ள வைக்கிற;  இருப்பது உண்மையாய் இருந்தும்  இல்லவே இல்லாது போல  அலட்டிக் கொள்ள செய்கிற;  உண்மையாய், மென்மையாய்  வெள்ளையாய் சிரிக்க வைக்கிற;  சமயத்தில் ஏனோ  காரணமே இல்லாமல்  கண்கலங்க   வைக்கிற;  உள்ளத்தில் ஓராயிரம் இருந்தும்  இயல்புக்கு மாறா...

உயிரற்ற உடலும் உடலில்லா உயிரும்......

Image
விடிகாலை சூரியனின் வெளிச்சத்திலே  வெள்ளை துணி போர்த்திய உயிரற்ற என் உடலை  என் உயிர் மட்டும் பார்க் கையிலே .......... எத்தனை ஆசைகள் எத்தனை அபத்தங்கள்  எத்தனை தேவைகள் எத்தனை தேடல்கள்  எத்தனை கேள்விகள் எத்தனை கேலிகள் எத்தனை வியாக்கியானங்கள் எத்தனை விவாதங்கள் எத்தனை குதர்க்கங்கள் எத்தனை குழப்பங்கள் என அத்தனையும் காணாமற்போன அன்றைய அதிகாலை நேரமே என் உடலுக்கும், உயிருக்கும் பிடித்த நேரம்.  "தூக்கத்திலேயே உயிர் போயிருக்கு பா, நல்ல சாவுதான்" என  இரு இதழ்கள் ஒரு செவியில்  சொன்னது கேட்டும்  "உஷ்....என்ன பேச்சு இது" என  செவிகளுக்கு சொந்தக்காரர்  இதழ்களுக்கு உரிமையானவரை  கண்டிப்பது போல பாராட்டியது கண்டும்  புன்முறுவல் பூத்தது என் உயிர்.   அதிர்ந்து போயிருந்த  என் மனையாளுக்கு ஆறுதல் தரும் வகையில்  அவளை இருபுறமிருந்தும் அணைத்திருந்த  கலங்கி போயிருந்த என் அன்பு மகள்களை கண்டபோது  என் உயிருக்கு வலித்தது  உடலை தே...

எங்கே அவள் .....என்றே மனம்....

Image
காற்றிலே கலந்து அதன் போக்கிலே  ஓடும் காகிதம் போலவே  காலத்தின் ஓட்டத்திலே  காணாமல் போனவன் நான் அல்ல. கல்லாய் ஓரிடத்திலே  கணமாய் காத்திருக்கிறேன்  எத்தனை புயல், எத்தனை வெள்ளம்  ஏதும் என்னை அசைத்தபாடில்லை;  என்னுள்ளே எனக்காய் நீ விட்டுசென்ற  உன் நினைவலைகள் எந்தக்  கணமும்  என்னை நீங்கியபாடில்லை.  உன்னை விட்டும் என்னை எடுத்து  எங்கு சென்றாயோ நீ?  நீ விட்டுச் சென்ற உன்னில்  நான் எனை காண்பது போலவே  நீ எடுத்துச் சென்ற என்னில்  உனை காண்பாயோ நீ?  காகிதமாய் காற்றிலே மிதந்து  உன்னில் கலந்த என்னைத் தேடி அலையாமல்   கல்லாய் கணமாய் ஓரிடத்திலே  காத்திருந்து நான் கண்டதென்ன? காதலே இது பொய்யடா  வெறும் காற்றடைத்த பையடா குத்திவிடத் தேவையில்லை.  தானாய் கிழியும் பை, காணாது போகும் காற்று.   காதலே இது பொய்யடா  வெறும் காற்றடைத்த பையடா.

மருத்துவச்சி.....

Image
  படைத்தல் நிகழ்த்த  இரண்டு நிமிட கலவியில் இலகுவாய்  ஆணும் பெண்ணும் இணைகின்றோம்.  படைப்பவன் ஆண்டவன் ஆயினும்  படைப்பிப்பவள் மருத்துவச்சி அல்லவா? அன்மையில்  இருக்கும் அன்பான  மருத்துவச்சி இவளை ஏன் மறக்கின்றோம்?  எங்கோ  இருக்கும்  ஆண்டவன் தேடி  அங்குமிங்கும் ஏன் அலைகின்றோம்?   பத்து பத்து மாசங்கள் தாய்மை சுமப்பதை  பல மணி நேரம் போராடி  பூமிக்கு புது புது பூக்களாய் அவள் கொண்டு வருவதை பத்திரமாய் அவள் பாதுகாப்பில்  பத்து நாட்கள் விட்டுவிட்டு  உறவினர் படை சூழ ஊருக்கு போகையில் பூவினை பூக்கச் செய்தவளுக்கு  முறையான மரியாதை  செய்ய மறந்தே போகிறோம் பில்லை குறைக்க சண்டை செய்ய மறப்பதில்லை.   வாதம் தவிர்த்து  இழிவை மறந்து  தான் புதிதாய் பிறப்பித்த பூவினை  விழி விரிய ஒரு முறை அன்பாய் பார்த்துவிட்டு அடுத்த பூவினை அழகாய் படைக்க  அரக்க பறக்க ஓடுகிறாள்  வெள்ளை கோட்டில் வண்ண தேவதை.  பொன்னான ஒரு மாலைப் பொழு...

அன்பென்றால் என்ன அப்பா?

Image
அப்பா....அப்பா...அன்பென்றால் என்ன அப்பா?  அர்த்தமுள்ள இந்த க்  கேள்வியை கேட்டு விட்டு  பதிலுக்கு காத்திராமல் கல கலவென சிரித்து என்னை கட்டி அணைத்து முத்தமிட்டு  விளையாட ஓடிப் போனாள் என் மகள்.  அவள் கேள்வி கேட்டதும் கேட்ட கேள்விக்கு பதிலே எதிர்பாராமல்  கல கலவென சிரித்ததும்  என்னை கட்டி அணைத்ததும் அணைத்துப் பின் முத்தமிட்டு ஓடி மறைந்ததும்  அவள் முத்தத்தின் எச்சில்  என் முகத்தில் காயும் முன்  அன்பென்றால் என்னவென்று  எனக்கு அழகாய் புரிய வைத்தது.  சப்பணமிட்டு அமர்ந்த நான்  கைககளை நீட்டியவாறே காத்திருந்தேன்  அவள் அணைப்பிற்கும் என் இன்னொரு கன்னத்தில் அவள் முத்தத்தின் எச்சிலுக்கும்.  விளையாட்டில் ஏதோ விபரீதம் போலிருக்கிறது  அழுதவாறே வந்த அவள்  நீட்டிய என் கைகளை பார்த்து  வினாடிகள் சில யோசித்தாள் பின் பூவாய் முகம் மலர்ந்தவள்  பட்டம் பூச்சி போலவும் பறந்தே வந்தாள் நீட்டிய என் கைகளுக்குள் சிறை புகுந்தவள்  காய் ந் திருந்த என் கன்ன...

பக்கத்து வீட்டு மரணம்....

Image
பக்கத்து வீட்டுக்காரர்  தன் அன்பு மனைவி  திடீர் மாரடைப்பில்  காலமாகிப் போனதாய்  கலங்கிய கண்களுடன் சேதி சொல்லிப் போனார் . அதிர்ந்து போனாள் என் அன்பு மனைவி  எதை நினைத்து அதிர்ந்தாளோ?   மூக்குக் கண்ணாடியை இழுத்து  விட்டுக் கொண்ட எழுபது வயது  என்  ஆரோக்கிய  தாய்  "புண்ணியவதி போய் சேர்ந்து விட்டாள்" என்று கூறி மௌனமானாள்.  முப்பத்தி ஐந்து வயதில் மரணித்த அவள்  புண்ணியவதி என்றால்  எழுபது வயதில் என் தாயும்   ஐம்பது வயதில் நானும்  இன்னமும் புண்ணியம் ஏதும் செய்யவில்லையோ?  புத்தியில் எழுந்த கேள்வி  கீழிறங்கி இதயத்தை தாக்க  பக்கத்துக்கு வீட்டு புண்ணியவதி அம்மாவிற்காய் ஆனந்தப்  படுவதா  என் வீட்டு அம்மாவிற்கும் எனக்குமாய்  வருத்தப் படுவதா என்கிற குழப்பத்தில்  நானும் அதிர்ந்து அனைந்தேன். "ஐயோ ....என்னங்க..." என்கிற என் மனைவியின் அலறல்  என் உயிருக்கு கேட்டது  உடலுக்கு கேட்கவில்லை.