மழைக்கால மத்தியான வேளை.........
மழைக் கால நாட்களில்
சட்டென்று இருட்டிக் கொண்டு மழை பொழியத் துவங்கும்
மத்தியான வேளை என்பது
மனதிற்குப் பிடித்த பெண்ணுடன் அமர்ந்து
இளையராஜா இசையோடும்
இதமான தேநீரோடும்
இணையில்லா புத்தகங்களோடும்
இருவர் மனதிற்கும் பிடித்த விசயங்களை
மனம் விட்டு மணிக் கணக்கில் பேசிக் கொள்வதைப் போல
அத்தனை சுகமாய் இருக்கிறது.
இருப்பது போலத் தோன்றுகிற
என் ஆண் நண்பர்களின் அருகாமை
என் அறிவுக்குப் பிடித்தம் ;
இருக்கிறார்களா என்று தெரியாத
என் பெண் நண்பர்களின் அருகாமை
என் ஆன்மாவிற்குப் பிடித்தம்.
மனையவளே மனதிற்குப் பிடித்து விட்ட
உயிர் தோழியாகவும் அமைந்து விட்டால்
அதனினும் சுகமும் வேறில்லை
அதனினும் சௌகரியமும் வேறில்லை.
என் உயிரையும் உடலையும்
சொந்தம் கொண்டாடும் மனையவள் வேறாகவும்
என் மனதைக் கூட சொந்தம் கொண்டாடாத
உயிர் தோழி வேறாகவும் அமைந்து விட்டால்
அதனினும் சோகமும் வேறில்லை
அதனினும் சங்கடமும் வேறில்லை.
பிறந்த ஊராய் இருந்திருந்தால்
சோ வென கொட்டும் மழையில்
ஹோஒ வென நனைந்து,
மழையோடு உறவாடி மகிழ்ந்திருப்பேன்.
பிழைப்புக்கு வந்த இடத்தில்
உயிரை உறைக்கும் குளிரால்
சோ வென கொட்டும் மழையை
அச்சசூ வென கண்ணாடி கதவின் மேலே
கன்னம் வைத்து மட்டுமே ரசிக்க முடிகிறது.
rain, rain go away
come again during warm summer day
little Syed wants to play with you
rain,rain go away
come again during warm summer day.
Comments
Post a Comment