மருத்துவச்சி.....
படைத்தல் நிகழ்த்த
இரண்டு நிமிட கலவியில் இலகுவாய்
ஆணும் பெண்ணும் இணைகின்றோம்.
படைப்பவன் ஆண்டவன் ஆயினும்
படைப்பிப்பவள் மருத்துவச்சி அல்லவா?
அன்மையில் இருக்கும் அன்பான
மருத்துவச்சி இவளை ஏன் மறக்கின்றோம்?
எங்கோ இருக்கும் ஆண்டவன் தேடி
அங்குமிங்கும் ஏன் அலைகின்றோம்?
பத்து பத்து மாசங்கள் தாய்மை சுமப்பதை
பல மணி நேரம் போராடி
பூமிக்கு புது புது பூக்களாய்
அவள் கொண்டு வருவதை
பத்திரமாய் அவள் பாதுகாப்பில்
பத்து நாட்கள் விட்டுவிட்டு
உறவினர் படை சூழ ஊருக்கு போகையில்
பூவினை பூக்கச் செய்தவளுக்கு
முறையான மரியாதை செய்ய மறந்தே போகிறோம்
பில்லை குறைக்க சண்டை செய்ய மறப்பதில்லை.
வாதம் தவிர்த்து
இழிவை மறந்து
தான் புதிதாய் பிறப்பித்த பூவினை
விழி விரிய ஒரு முறை அன்பாய் பார்த்துவிட்டு
அடுத்த பூவினை அழகாய் படைக்க
அரக்க பறக்க ஓடுகிறாள்
வெள்ளை கோட்டில் வண்ண தேவதை.
பொன்னான ஒரு மாலைப் பொழுதில்
மருத்துவச்சியாய் வரத் துடிக்கு ம்
பூவான என் பூமகள் எனை கேட்டாள்:
இறை நேசம் எப்படி இருக்குமென.
முகம் பார்க்கும் ஆளுயர கண்ணாடி முன்
அவளை நிறுத்தி இதமாய் சொன்னேன் நான்
இப்படி இருக்கும் இறைநேசம் என.
ஒவ்வொரு உயிரையும்
பத்திரமாய் பூமிக்கு கொண்டுவர
ஒவ்வொரு முறையும் தன் உயிர் கொடுக்கும்
மருத்துவச்சி தாயே உனை போற்றுகிறேன் நானே.
Comments
Post a Comment