Posts

"நல்லதோர் வீணை செய்தே....."

Image
"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ" நல்லதாக எனைச் செய்தே புழுதியில் எறிவது போலே இந்தப் புவியில் எறிந்தது ஏனோ? "சொல்லடி சிவசக்தி சுடர் மிகும் அறிவுடன் ஏன் என்னை படைத்தாய்" சுடர் மிகும் அறிவுதான் எனைத் தொட்டவன் சொல்கிறான் வெகு சீக்கிரம் நான் சூடாவதாய் மெழுகாய் இல்லை நான் உருகி ஓடியதை உருட்டித் திரியூட்டி மீண்டும் எரியூட்ட. எரிகிறேன் நான் என் வெளிச்சத்தில் இல்லை எவருக்கும்  விடியல் எனக்கே தவிர. பஞ்சுப் பொதியாய் நான் பற்றிப் பிடித்துக்கொள்கிறேன் நீ எறியும் ஒவ்வொரு தீ குச்சியையும் நடக்கையில் தெரியுது நிழலில் நிழலாய் என் சாம்பல் உடல் இருக்கையிலேயே உயிரை எரிப்பது இதுதானோ? புழுதியால் படைத்ததை புழுதியில் எறிந்ததும் உன் இஷ்டம் எறிந்ததை எரிப்பதும் உன் இஷ்டம் உன் இஷ்டம் கொஞ்சம் என் கஷ்டம் இருப்பினும் இல்லை சிறு கஷ்டத்தில் பெரும் நஷ்டம் புலம்பலை செய்கிறேன் புளங்காஹிதத்தோடே நீ புன்னகைப்பது புரிகிறது என் சுடர் மிகும் அறிவுக்கு "சொல்லடி சிவசக்தி சுடர் மிகும் அறிவுடன் (ஏன்) என்னை படைத்தாய்"

தொலைத்து தொலையாமல் போ.............

Image
வலிக்கையில் வலிக்கிறதென என்ன உளறல்? வலி போக வலியை வலிக்க விடு. விழி தெரிய விழியை விழிக்க விடு. துயில் போக துயிலை தூங்க விடு. நித்தமும் நடக்குது இரட்டை வாழ்க்கை நீயா தூங்கி நீயா விழிக்கிறாய்? நீ உண்மையறிய உன்னை உறங்கச் செய்கிறேன்; நீ பொய்யைத்  தொடர உன்னை பிறக்கச் செய்கிறேன். இறக்கச் செய்து உறங்கச் செய்கிறேன்; உறங்கச் செய்து பிறக்கச் செய்கிறேன். நித்தமும் நடக்குது இரட்டை வாழ்க்கை நீயா தூங்கி நீயா விழிக்கிறாய்? செத்துப் பிழைத்து செத்துப் பிழைத்தெனவே இறப்பையும் பிறப்பையும் இடுக்கிலே கட்டிக் கொண்டலைகிறாய்; இதிலே நான் நானெவே எனது எனதெனவே இனிமையில்லா இளிப்பெதற்கு? உன்னை உனக்கு கொடுத்தது என்னைத் தூக்கியெறிந்து உன்னில் நீ உறைவதற்கல்ல உன்னைத் தூக்கியெறிந்து என்னில் நீ மறைவதற்கு. தொலைந்து போ; உன்னைத் தொலைத்து என்னில் தொலைந்து போ. என்னில் தொலைந்து என்றும் தொலையாமல் போ. எவன் சொன்னான் என்னை நேசித்தாலே உன்னை நான் நேசிப்பேன் என்று? அவனிடம் சொல் நான் உன்னை நேசிப்பதாலேயே நீ என்னை நேசிக்கிறாய் என்று; நான் உன்னை நேசித்தாலே நீ என்னை நேசிப்பாய...

இறைவனே ....I Love You

Image
என்னை தொலைத்து உன்னை புரிந்தேன்; என்னை தொலைத்தும் உன்னைப் புரிந்த விந்தையறிந்து வியந்தேன். தலை தூக்கி விண்ணை பார்த்தேன்; தலை தாழ்த்தி மண்ணை பார்த்தேன்; விண்ணில் தெரிந்ததே மண்ணிலும். விண்ணைப் பார்க்கையில் என் விழி வழி உன் வழி; மின்னித் தெரிவதென்ன உண்மையில் விண்மீனா? மண்ணைப் பார்க்கையில் என் வழி வழி உன் விழி; இனி "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை". "விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கிலேருதாம்" ஓ ...ஓ...ஓ .... என் இறைவா I Love You. போற்றினாலும் புகழ்ந்தாலும்  நாடினாலும் நெகிழ்ந்தாலும் எந்தக் கனமும் இறையோடு இணையுங்கள் இதயக் காதலோடு,  இறைக் காதலோடு.

நீயும் நானும் ......

Image
பரந்த வானம் நீ பால் நிலா நான் தோன்றித் தேய்ந்து மறைந்து தோன்றித் தேய்ந்து மறைந்தெனவே உன்னுடனே உனக்குள்ளே உனதாலே உனதிச்சைப்படியே. மலர்ந்த மலர் நீ மயங்கிய வண்டாய் நான் உன் மீது உனக்குள்ளே உனையே சுற்றிச் சுற்றி தேன் குடித்து மாளேன் நான் தேன் குடித்தும் மீளேன் நான். தேகம் தொடும் தென்றல் நீ நீ தொடும் தேகம் நான் எனைத் தொடவே தென்றலாய் நீ நீ தொடவே உன் தேகமாய் நான். எனைத் தாங்கித் தவழும் கருமேகம் நீ நீ சுட்டிய இடத்தில் விரும்பிய வினாடியில் உன்னிலிருந்து உனதால் நம் மண்ணுயிர்க்குப்  பெய்யும் மாமழை நான். அலை புரளும் கடலாய் நீ அந்தக்  கடலில் புரளும் அலையாய் நான் கடலின்றி அலையேது அலையின்றி கடலேது நீயின்றி நான் ஏது நானின்றி நீ ஏது நாமின்றி நமதேது? ஒளியாய் நீ. அந்த ஒளியின் ஒளியாய் உன்னிலிருந்து நான். எனைப் புகழ்ந்து உனை போற்றுகின்றார் என் புகழுக்கு உரியவன் நீ என்பதாலே நானே புகழ்வதும் நீயே என்பதாலே. என்னைப் பார்த்தவர் என்னில் மயங்கி  உன்னில் நானாய் உறங்குவோர் என்னைப் பார்க்கத் துடிப்பவர் தன்னில் உறங்கி  உன்னில் நானாய் விழிப்போர். உன்னை...

என் அறிவு ..........

Image
என் அறிவு  நான் தேடிச் சேர்த்த என் துயரம். இனி த் தெரிந்து கொள்ள ஏதுமில்லை  எனச் சொல்ல நிறைவாயுமில்லை ஏதும் தெரியாது  எனச் சொல்ல குறைவாயுமில்லை. நிறை குடம் எனப் போற்றுவாருமில்லை அரைகுறை என ஏசுவாருமில்லை. நீண்ட நீர்வழிப் பயணத்திலே தொலைந்து போயின என் துடுப்புகள்.... நடுக்கடலில் தத்தளிக்கும் என் படகு..... ஆயினும் இல்லை உயிர் பிழைக்கும் போராட்ட ம் என்னிடத்திலே. தத்தளிப்பு தந்த தாலாட்டிலே எத்தனையோ நாட்களாய் விட்டுப் போன அத்தனை தூக்கமும்  எட்டிப்பிடிக்கும் களிப்பிலே என் கண்கள். "நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் நேரம் நெருங்குதம்மா" உலர்ந்து போய்க் கொண்டிருந்த உதடுகள் வழியே உற்ச்சாகமாய் வந்தன சோகப் பாடல் வரிகள். என் அறிவு  நான் தேடிச் சேர்த்த என் துயரம்; ஒன்றைத்தவிர ஒன்றுமேயில்லை என்பதைத்தவிர இதுவரை நான் தெரிந்து கொண்டது எதுவும் ஒன்றுமேயில்லை இனி நான் தெரிந்து கொள்ளவும் ஒன்றுமேயில்லை. துயின்று விழித்து உண்டு உடுத்தி உழைத்துக் களைத்து உண்டு உடுத்தி கலைத்துக் களித்து களைத்துக் கண்மூடி ...

"வர வர (மனித) காதல் கசக்குதையா...."

Image
"வர வர காதல் கசக்குதையா...." FM 106.4 "ஏன் என்ற கேள்வி யாரும் கேட்காமல் வாழ்ந்ததில்லை" FM 93.5 சரி ...ஏன் என்று கேட்டேன் என்னிடமே எனக்கு இல்லாமல் போனதாலா? என்னிடம் இல்லாமல் போனதாலா? பூலோக காதல் எல்லாம்  கேட்கிறது உணர்வதற்கு வேண்டும் பூத உடலெனவே  இறைக்காதல் மட்டுமே கேட்கிறது அதை உணர்வதற்கு ஏன் வேண்டும் என் பூத உடலெனவே இறைக்காதலின் இனிமையிலே மனிதக்காதல் வரவர கசக்குதைய்யா வினாவுக்கான விடை கிடைத்ததில் புன்னகை மொட்டு என் முகத்தில் பூத்தது "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணல் உறவுக்கென்றே உடல் வளர்த்தேன் அவன் அருளை பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்" - FM 106.4 "மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது" - FM 93.5 இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமென எதைக்கேட்டாலும் எத்தனைதான் கேட்டாலும் உள்ளம் உணர்வதெல்லாம் உனையே  சென்ற இடம் வந்தது தானுந்தின் இஞ்சினை நிறுத்தியதில் கூடவே கமலும் மௌனமானார். இறங்கி நடந்த என் வழியெங்கும் முகத்தில் பூத...

ஆணும், பெண்ணும்....இறைவனும்

Image
அன்று...... கம்பீரமான ஒரு ஆணையும் கலக்கலான ஒரு பெண்ணையும் பார்க்கையிலே உள்ளத்தில் ஏக்கம் வந்தது.   கற்பனையில் கம்பீரம் கொண்டதும் கலக்கலான பெண்ணை கயமையால் களவாட அதே கற்பனையில் மனம் இராவண புத்தி போதித்தது; படைப்பில் கவனம் நிலைத்து படைப்பவனை உள்ளம் உதாசீனம் செய்தது.   இன்று.... கம்பீரமான ஒரு ஆணையும் கலக்கலான ஒரு பெண்ணையும் பார்க்கையிலே உள்ளுக்குள் கை குவித்து, நெற்றி நிலத்திலே பட  அடடே இன்னா மஜாவான ஆளுப்பா நீ என கம்பீரத்தை ஆணிலும் கலக்கலை பெண்ணிலும் படைத்தவனின் படைப்பாற்றலை உள்ளம் பாராட்டி பரிதவிக்கிறது; படைப்பின் மீதான கவனம் சிதைந்து படைப்பவனின் மீதே உள்ளம் நிலைக்கிறது;   படைப்பவனை பற்றியே சிந்தனை நீள்கிறது. ஆண் அவன் ஆணவம் அல்ல; பெண் அவள் பேதமை அல்ல; ஆண் அவன் ஆண்டவனின் ஆளுமை; பெண் அவள் ஆண்டவனின் மேன்மை. என்னையும் என் போன்ற உங்களையும் காண்கையில் நான் ஆண்டவனின் ஆளுமை உணருகிறேன்;   என்னவளையும் என் அவள் போன்ற பெண்களையும் காண்கையிலே நான் ஆண்டவனின் மேன்மை உணருகிறேன்.   நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பர் வெயில் தன் அருமை...