என் அறிவு ..........



என் அறிவு 
நான் தேடிச் சேர்த்த என் துயரம்.
இனி
த் தெரிந்து கொள்ள ஏதுமில்லை 
எனச் சொல்ல நிறைவாயுமில்லை
ஏதும் தெரியாது 
எனச் சொல்ல குறைவாயுமில்லை.

நிறை குடம் எனப் போற்றுவாருமில்லை
அரைகுறை என ஏசுவாருமில்லை.

நீண்ட நீர்வழிப் பயணத்திலே
தொலைந்து போயின என் துடுப்புகள்....
நடுக்கடலில் தத்தளிக்கும் என் படகு.....
ஆயினும் இல்லை
உயிர் பிழைக்கும் போராட்ட
ம் என்னிடத்திலே.

தத்தளிப்பு தந்த தாலாட்டிலே
எத்தனையோ நாட்களாய் விட்டுப் போன
அத்தனை தூக்கமும் 
எட்டிப்பிடிக்கும் களிப்பிலே என் கண்கள்.

"நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் நேரம் நெருங்குதம்மா"
உலர்ந்து போய்க் கொண்டிருந்த உதடுகள் வழியே
உற்ச்சாகமாய் வந்தன
சோகப் பாடல் வரிகள்.

என் அறிவு 
நான் தேடிச் சேர்த்த என் துயரம்;
ஒன்றைத்தவிர ஒன்றுமேயில்லை என்பதைத்தவிர
இதுவரை நான் தெரிந்து கொண்டது எதுவும் ஒன்றுமேயில்லை
இனி நான் தெரிந்து கொள்ளவும் ஒன்றுமேயில்லை.

துயின்று விழித்து
உண்டு உடுத்தி
உழைத்துக் களைத்து
உண்டு உடுத்தி
கலைத்துக் களித்து
களைத்துக் கண்மூடி
துயின்று விழித்தென
தேடிச் சேர்த்த துயரம் தொலைத்து
ஒன்றிலிருந்து வந்த எல்லாமும் எல்லோரும்
அந்த ஒன்றே தவிர
வேறில்லையெனவே
ஆழ் கடலில் நான் அமைதி காக்கிறேன். 

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?