"வர வர (மனித) காதல் கசக்குதையா...."
"வர வர காதல் கசக்குதையா...."
FM 106.4
"ஏன் என்ற கேள்வி யாரும் கேட்காமல் வாழ்ந்ததில்லை"
FM 93.5
சரி ...ஏன் என்று கேட்டேன் என்னிடமே
எனக்கு இல்லாமல் போனதாலா?
என்னிடம் இல்லாமல் போனதாலா?
பூலோக காதல் எல்லாம் கேட்கிறது
உணர்வதற்கு வேண்டும் பூத உடலெனவே
இறைக்காதல் மட்டுமே கேட்கிறது
அதை உணர்வதற்கு ஏன் வேண்டும்
என் பூத உடலெனவே
இறைக்காதலின் இனிமையிலே
மனிதக்காதல் வரவர கசக்குதைய்யா
வினாவுக்கான விடை கிடைத்ததில்
புன்னகை மொட்டு என் முகத்தில் பூத்தது
"அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடல் வளர்த்தேன்
அவன் அருளை பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்" - FM 106.4
"மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது" - FM 93.5
இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமென
எதைக்கேட்டாலும்
எத்தனைதான் கேட்டாலும்
உள்ளம் உணர்வதெல்லாம் உனையே
சென்ற இடம் வந்தது
தானுந்தின் இஞ்சினை நிறுத்தியதில்
கூடவே கமலும் மௌனமானார்.
இறங்கி நடந்த என் வழியெங்கும்
முகத்தில் பூத்திருந்த புன்னகை பூவின் இதழ்கள்
சந்திக்கவேண்டியவரை கண்டதும்
சிந்தித்துக்கொண்டிருந்த விஷயங்கள் சிதறிப்போக
உண்மைப் புன்னகை உதிர்ந்து போன நிலையில்
பரஷ்பர போலி புன்னகையில்
மெலிந்தது எங்கள் முகம்
உதிர்த்து வந்த உண்மைப் புன்னகையை
திரும்பி போகும் வழியில்
பொருக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
மறவாமல்.
உணர்ந்த விஷயம் அதுவென்பதால்
உலர்ந்திருப்பினும் உசத்திதானே?
Comments
Post a Comment