இறைவனே ....I Love You
என்னை தொலைத்து
உன்னை புரிந்தேன்;
என்னை தொலைத்தும்
உன்னைப் புரிந்த
விந்தையறிந்து வியந்தேன்.
தலை தூக்கி விண்ணை பார்த்தேன்;
தலை தாழ்த்தி மண்ணை பார்த்தேன்;
விண்ணில் தெரிந்ததே மண்ணிலும்.
விண்ணைப் பார்க்கையில்
என் விழி வழி உன் வழி;
மின்னித் தெரிவதென்ன உண்மையில் விண்மீனா?
மண்ணைப் பார்க்கையில்
என் வழி வழி உன் விழி;
இனி "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை".
"விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்
அரங்கிலேருதாம்"
ஓ ...ஓ...ஓ ....
என் இறைவா I Love You.
போற்றினாலும்
புகழ்ந்தாலும்
நாடினாலும்
நெகிழ்ந்தாலும்
எந்தக் கனமும்
இறையோடு இணையுங்கள்
இதயக் காதலோடு,
இறைக் காதலோடு.
Comments
Post a Comment