விடுகதையோ இந்த வாழ்க்கை ........?

                                                                 


வினாவுக்கான விடையாக 

விடுகதையே வாழ்க்கை எனில் 

விடையில்லா விடுகதை ஏது?

விடுகதையே வாழ்க்கை எனில்

வாழ்க்கையின் விடை எது? 


எவனோ

விடுகதை விடுப்பவன் ?

ஏனோ

அவன் அதை விடுப்பது?


இந்தக் கேள்வியும் எந்தக் கேள்வியும் 

இல்லாத வாழ்க்கை கேலி.

இந்தக் கேள்வியும் இன்னும் கேள்விகளுமென 

இருக்கும் வாழ்க்கை மலர் வேலி.


இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான 

பதில்கள் உங்கள் பக்கத்தில். 

தட்டுங்கள் திறக்கப்படும், 

கேளுங்கள் கொடுக்கப்படும். 


எவனோ

விடுகதை விடுப்பவன் ?

விடுப்பவன் இறைவன்.

ஏனோ

அவன் அதை விடுப்பது ?

 விடுப்பது விடை தரவே.


இப்படி.....

இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான 

விடை தெரிந்தவன் வாழ்க்கைப் பாதையில் 

எப்போதும் விடியலின் வெளிச்சம்.

ஆஹா ...

தெள்ளத் தெளிவான வாழ்க்கைப் பயணம் 

அவனுக்குத் தான் எத்தனை சுகம். 


இந்தக் கேள்விக்கும் எந்தக் கேள்விக்குமான

விடை தெரியாதவன் வாழ்க்கைப் பாதையில் 

என்றென்றும் அஸ்தமனத்தின் கும்மிருட்டு.

அய்யோ ....

தட்டுத் தடுமாறும் வாழ்க்கைப் பயணம் 

அவனுக்குத் தான் எத்தனை அச்சம். 


சுகமிருக்க பயமேன்?

தேர்ந்தெடுங்கள் தெளிவுடனே. 


விடுகதையோ இந்த வாழ்க்கை?

ஆம் என்றால்.... 

வாழ்க்கை அச்சம், 

இல்லை என்றால்....

அது இனி நம் இஷ்டம்.

 

என்னை அறிந்து உன்னை அறிந்த எனக்கு 

வாழ்க்கை மட்டுமல்ல 

இனி நீயுமில்லை விடுகதை என 

உறுதியாகச் சொல்லுங்கள் 

விடுகதையை விடுப்பவனிடம்.


தன்னை அறிந்து 

தன்னை அறிந்தவனை 

'நண்பா...' என்றழைக்கிறான் 

நட்புடனே நம் இறைவன்.


இறைவனையே நட்பாகக் கொண்டவன் 

உறவுகளை உயிராக்கி

வாழ்க்கையை தனதாக்கிக் கொண்டவன்

உங்களைப் போலவும் 

என்னைப் போலவும். 


நமக்கு.....

"தொடர் வெற்றி நிச்சயம் ...இது வேத சத்தியம்"

Comments

Popular posts from this blog

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாழ வைக்கும் காதலுக்கு ஜே.....

ஆணும், பெண்ணும்....இறைவனும்