Posts

Showing posts from November, 2011

Burning desires.....

Image
Burning Desires or Burning The Desires? What is life without burning desires? What is life without burning the desires? உள்ளத்தில் ஆசைகள் உவப்பான வாழ்க்கைக்கு;  ஆசைகள் இல்லா உள்ளம் உயர்வான வாழ்க்கைக்கு.  Burning Desires or Burning The Desires? உவப்பாய் ஓர் முடிவெடுங்கள்  அதன் உயர்வு தாழ்வு கவலையின்றி.   

இது ஒரு பொன் மாலை பொழுது....

Image
"இது ஒரு பொன் மாலை பொழுது  வானமகள் நானுகிறாள்  வேறு உடை பூணுகிறாள்" மாலை எனும் மன்னன் தொட்டான்  வானமெனும் மங்கையவள் மஞ்சள் முகம்  நாணத்தில் பூசியது சிவப்பு நிறம்  மேகமெனும் ஆடை மெல்லக் களைந்தாள்  வெள்ளுடல் சிலிர்த்து  வெட்கம் பூசியது  மஞ்சளோடு பொன் வண்ணம்.  வானச்சுவற்றின் மீதிலே  இறைவனின் மந்திரத் தூரிகை மாலையில் தீட்டிய இவ்ஓவியம் பார்த்த என் கண்களில் பல கோடி மின்னல்கள் துவண்டிருந்த என் நெஞ்சிலே  உற்சாகத்  துள்ளல்கள்.   அகம் மயக்கும் இது போல மாலையும் உளம் கிறக்கும் அதிகாலை வேலையும் அவன் (இறைவன்) இருப்பிற்கு அத்தாட்சி இவ்வுண்மை உலகிற்கு இன்று நான் உரைத்தமைக்கு என் ஆத்தா நீயே சாட்சி.

நினைக்கத் தெரிந்த மனமே....

Image
"நினைக்க த்  தெரிந்த மனமே உனக்கு மறக்க த்  தெரியாதா?  பழக த்  தெரிந்த உயிரே உனக்கு விலக த்  தெரியாதா?"  He came into my life as he saw me with his eyes but I saw him with my heart. He conquered me with his love(?) but I conquered(?) him with my life. He often said he loves me I always smiled as if I knew what he meant. He taught me what his love is I never had a chance to teach him what love is. He got bored of me one day I decided to cut him loose the same day. He left me alone another day I refused to go with him he might say. Here I am sitting under the dying tree With the aching head on my paining knees; With the shivering hands holding my shaking legs; With the warm tears rolling over my cold face. Awaiting my eyes dry up Awaiting my heart stop melting Awaiting my thoughts disappear Awaiting my mind maneuver my madness. Empty is the place where I was with him Glowing is my heart with my love for him Gloomy is the life I am not very fond of anymore without hi

டக்டக்...டக்டக்..பட்பட்....பட்பட்..

Image
டக்டக்...டக்டக்.. கண்களின் இதழ்கள் கவிதை பேசின  இச் இச் ....இச்  இச்  கன்னத்தில் இதழ்கள் காவியம் பாடின  சட்சட்...சட்சட்... வானத்தின் இதழ்கள் மாமழை பொழிந்தன டப்டப்....டப்டப்... இதயத்தின் இதழ்கள் உயிரிசை உணர்த்தின பட்பட்....பட்பட்... பூக்களின் இதழ்கள் புன்னகை பூத்தன தக்தக்...தக்தக்... தத்தையின் இதழ்கள் தன் தாய் மொழி பேசின தட்தட்...தட்தட்... கால்களின் இதழ்கள் காற்றாய் பறந்தன டுப்டுப்..டுப்டுப்... துப்பாக்கியின் இதழ்கள் உயிர்களில் துளைகள் போட்டன சல்சல் ....சல்சல்... உயிரிகளின் உதிரம் ஊரெங்கும் வடிந்தன கட்கட்....கட்கட்... கனவின் இதழ்கள் என் கற்பனை மூடின திக்திக்....திக்திக் பயத்தின் இதழ்கள் உள்ளத்தில் குவிந்தன இடப்பக்கம் இதயம் சோர்ந்து என் மனைவி வலப்பக்கம் அழுது சோர்ந்த என் குழந்தை அண்மையில் குண்டு சத்தம் அகத்திலோ அச்சத்தின் உச்சம் புன்னகைத்த பூக்களின் மேல் பூட்சு கால்கள் டப்டப்...டப்டப்... டுப்டுப்...டுப்டுப்... திக்திக்....திக்திக்...

Jump in joy...

Image
steps ahead n steps back  jumping up n jumping down  like a little boy down the street heart in joy n mind in mirth extreme beauty everywhere  let dawn n dusk delight your soul may colorful flowers cover your way and darling clouds drizzle all your day let gentle breeze kiss your face but stand still asking more passing away will it look back come again with a smiling face kiss you again on your chubby cheeks whisper something before whistling away steps ahead n steps back jumping up n jumping down like a little boy down the street heart in joy n mind in mirth extreme beauty everywhere let dawn and dusk delight your soul brilliance makes you little mad little madness makes you a little lad jump in joy like a little girl forget what watching people might say

நீயும், நானும் .....இருபதிலிருந்து அறுபதுவரை

Image
நம்மை நாம் நம் அன்பினால்  அணைத்திட்ட அழகிய நாட்கள்  ஒருவரோடு ஒருவரென  ஒருவருக்குள் ஒருவரென ஏழு ஜென்ம வாழ்வினை ஏழு நிமிடங்கள் போலவே வாழ்ந்திட்ட வசந்த நாட்கள் என் உயிரெங்கும் உன் உணர்வெனவே என் உணர்வெங்கும் உன் உயிரெனவே உன் உயிரெங்கும் என் உணர்வெனவே உன் உணர்வெங்கும் என் உயிரெனவே உறவாடி உவப்பெய்திய உத்தம நாட்கள் காதலெனும் கலை கற்று கற்ற கலையில் வெற்றி பெற்று காதலோடு காதலிலே கரைந்திட்ட காவிய நாட்கள் உன் சிணுங்கல்களில் சில நேரம் என் சில்மிசங்களில் பல நேரம் உன் காதலில் வெகு நேரம் நம் கலவியில் கன நேரமென காற்றாய் பறந்த கவித்துவமான நம் காலை பொழுதுகள் என்னை நீ மயக்கவும் உன்னை நான் கிறக்கவும் நம்மை நாம் மறக்கவுமென மயக்கியும் மயங்கியும் கழிந்த நம் மாலை பொழுதுகள் தடி ஊன்றித் தள்ளாடி தள்ளாமை வெல்லாமல் தனிமையிலே தவிப்போடு நாம் தவிக்கும் இயலாமை இயல்பான இந்த அறுபதிலும் இதழோரம் இனிய புன்னகை மனதுக்குள் மத்தாபூ நினைவினில் மழைச் சாரல் கனவினில் கலைக் கூடல் இருந்தாலும் இறவாது இறந்தாலும் மறவாது உன் கண்ணில் நான் கண்ட என் ஓளி ஓவியம் என் கண்ணில் நீ கண்ட நம் உயிர் ஓவியம் என் இருபதினில் எனக்குள் நீ நிறைந்தாய

"போவோமா ஊர்கோலம் ....

Image
சாலையோரம் நிற்கும் பூ பூத்த புளிய மரங்கள்  நிழல்தர நிற்பதாகவே நினைக்கிறாய் நீ அவை நிழல் தேடி நிற்பதாக நினைக்கிறேன் நான் விடிகாலை சூரியன் வெளிச்சம் தரவே என்கிறாய் நீ இருளை கண்டு பயந்து எத்தனை நேரம் தான் பதுங்கி இருக்கும் பாவம் என்கிறேன் நான் காண்பவை நம் கண்களில் ஒன்றாயினும் காட்சிகளின் கற்பித்தல் நம் புத்தியில் வெவ்வேறு விழிகளில் என் புத்தியை வைக்கிறேன் நான் விழிகளில் உன் இதயத்தை வைக்கிறாய் நீ இயற்கையை இயல்பாய் பார்க்கிறாய் நீ இயற்கையான உன் இயல்பை வியப்போடு பார்க்கிறேன் நான் நாம் கடந்து வந்த பாதை எங்கும் நீ பதித்து வந்த உன் பார்வைகள் மலர்ந்து நின்ற மலர்கள் தோறும் நீ தூவி வந்த உன் மகிழ்ச்சியின் தூறல்கள் குழந்தையென உன் குதூகலம் உன் குதூகலத்தில் வாலிபன் நான் தொலைத்தேன் என் வயோதிகம் என் அறிவின் திண்மையில் நான் ஆளுமை கொண்டது அந்தக்  காலம் உன் இயல்பின் இனிமையில் நான் ஆண்டவன் காண்பது இந்தக்  காலம் குதூகல என் குழந்தையே, வானத்து என் தேவதையே வளர்ந்த என் புத்தி, முதிர்ந்த என் சித்தி இரண்டையும் தவிர்த்த என் பிஞ்சு விரல்களை பற்றிக்கொள் நீ என் புறக்கண்ணில் நீ புகுந்து புறப்படு என் அறிவுக் கண்

Get up and get out....

Image
Oh Dear .... Getup it is a beautiful morning out there  Get out of the house and get into the sun Witness the rising sun through the racing clouds Singing birds with those scintillating words Charismatic flowers filling aroma in the air Put your brain behind the heart Let your heart sing the song of your soul Put your heart in your mouth Let your mouth speak the heart of your life  Put your hands up in the air  Dance like the world is all yours Love all always Hug the privileged few often Kiss your precious one as much as you can Oh Dear .... Getup it is a beautiful morning out there  Get out of the house and get into the sun.

பாப்பா பாடும் பாட்டு....

Image
தத்தி தத்தி தவழ்ந்தே வந்து  மொட்டு மொட்டு பவழ வாய் திறந்தே  திக்கி திக்கி திகட்டா இனிமையில் மழழை பேசி  பட்டு பட்டு உன் மென் விரல்களால்  என்னை தொட்டு தொட்டு  சட்டு சட்டென என் சோர்வனைத்தும் போக்கி அள்ளி அள்ளி உன்னை நான் அணைக்கையிலும் நான் கிள்ளி கிள்ளி உன் கன்னம் சிவக்கையிலும் துள்ளி துள்ளி என்னை சுற்றி பட்டாம் பூச்சியாய் நீ பறக்கையிலும் பூ பூவாய் நான் மலர்வேன் என்னையும் என்னிலிருந்து உன்னையும் படைத்தவனின் பாதங்கள் மனதால் நான் படிவேன் "பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு" 

கடவுள் பாதி மிருகம் பாதி....

Image
"கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்   வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியா கவிதை நான்   மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்  ஆனால்.......  கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே"  விண்ணையும் மண்ணையும் ரசிப்பவன்  தன்னையும் பெண்ணையும் ரசிக்க மறப்பதில்லை மறுப்பதும் இல்லை  விண்ணையும் மண்ணையும், தன்னையும் பெண்ணையும் ரசிக்கையில்  மிருகம் கொன்று கடவுள் வளர்க்கின்றான் புல்லையும் பூவையும் நேசிப்பவன்  தன்னையும் பெண்ணையும் நேசித்து நெகிழ்கிறான்  நேசித்து நெகிழ்கையில் மிருகம் கொன்று உணவாய் தின்று  கடவுள் வளர்த்து வாழ்க வாழ்கவென வாழ்கின்றான்  அடங்கா திமிர் தெறிக்கும் ஆணவ த்   தோள்கள் கொண்டவன்  அடங்கா அன்பு தெறிக்கும் பெண்ணவளின் பட்டுத் தோள்களில்  முகம் புதைக்கையில் அடங்கா ஆணவம் தொலைத்து அன்பு வளர்க்கின்றான்  மின்னலென மின்னும் அவள் மென் விழிகளில்  தன் முகமும் அகமும் கண்டவன்  மிருக குணம் தொலைத்து மிருதுவாகிறான்  மிருதுவாகையில் கடவுள் வளர்த்து மிருகம் கொல்கின்றான் ஆணவம் மட்டுமே அறிந்த