"இது ஒரு பொன் மாலை பொழுது வானமகள் நானுகிறாள் வேறு உடை பூணுகிறாள்" மாலை எனும் மன்னன் தொட்டான் வானமெனும் மங்கையவள் மஞ்சள் முகம் நாணத்தில் பூசியது சிவப்பு நிறம் மேகமெனும் ஆடை மெல்லக் களைந்தாள் வெள்ளுடல் சிலிர்த்து வெட்கம் பூசியது மஞ்சளோடு பொன் வண்ணம். வானச்சுவற்றின் மீதிலே இறைவனின் மந்திரத் தூரிகை மாலையில் தீட்டிய இவ்ஓவியம் பார்த்த என் கண்களில் பல கோடி மின்னல்கள் துவண்டிருந்த என் நெஞ்சிலே உற்சாகத் துள்ளல்கள். அகம் மயக்கும் இது போல மாலையும் உளம் கிறக்கும் அதிகாலை வேலையும் அவன் (இறைவன்) இருப்பிற்கு அத்தாட்சி இவ்வுண்மை உலகிற்கு இன்று நான் உரைத்தமைக்கு என் ஆத்தா நீயே சாட்சி.
உடல் முதிர்ச்சி உண்பதின் ஊட்டம் பொறுத்து. அறிவு முதிர்ச்சி தேடலின் ஆழம் பொறுத்து. மன முதிர்ச்சி அனுபவங்களின் அதிர்வு பொறுத்து. நிழலின் அருமை வெயிலின் வேகம் பொறுத்து. மழையின் அளவு மேகத்தின் ஓட்டம் பொறுத்து. புயலின் வேகம் காற்றின் ஆட்டம் பொறுத்து. படகின் ஆட்டம் அலைகளின் அசைவைப் பொறுத்து. நீல வானில் நிலவின் அழகு பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து. பூக்களின் புனிதம் பூஜைக்கா பூக்கள் என்பதைப் பொறுத்து. முகத்தின் அழகு அகத்தைப் பொறுத்து. அகத்தின் அழகு இறைவனின் இசைவைப் பொறுத்து. பக்தி என்பது தேவையைப் பொறுத்து. தேவை என்பது...
Comments
Post a Comment