சஹாரா பூக்கள் பூத்ததோ....


 

உச்சத்தில் சூரியன் உக்கிரமாய்.

எப்போதும் பூக்கும் 

வேர்வைத் துளிகளின் இடத்தில் 

இப்போது பூக்களாய் பனித்துளிகள்.


காதை கொடு 

கிசுகிசுக்கிறேன் காரணத்தை.

உன் செவிகளின் அழகில் 

என் இதழ்கள் இறக்காமல் இருக்குமானால்.  


நேற்றைக்கு....

என் செல்லமே என நீ என்னை விழித்ததாய்

ஓர் உணர்வு

ஒரு வேளை அது என் கற்பனையோ

என கடந்தேன் தளர்வுடன்


இன்று ....

அன்பில் துடிக்கும் உன் அழகு இதயம்

என் கண்களில் வந்து போனது

"கண்டது நிஜம்தானா?

சஹாரா பூக்கள் பூத்ததோ?"

என வியந்தேன் நான்


தவிக்கிறேன், துடிக்கிறேன்.

எப்படி அறிவேன்

நிஜம்தான் இது என்று?


இங்கு...

உச்சத்தில் சூரியன் உக்கிரமாய்.

உடலுக்கு வெளியே சஹாரா,

உள்ளத்தினுள்ளோ அண்டார்டிகா. 

இருபது வயது பையனின் இதயம் போல

இந்த வயதிலும்  பட படக்கிறது 

இந்த அரைக்கிழவனின் அழகு இதயம்.

என் இதயம் அழகு என்பதை அறிவேன் 

நீயே அழகாய் அதை அலங்கரிப்பதால்.  


கண்களில் இருக்கலாம் கோளாறு 

உன்னை அவை பார்ப்பதில்லையே!

ஆனால்...

உன்னை சுமக்கும்

என் உள்ளத்தில் ஏனிந்த பேஜாரு?!

உன்னிடத்திலோ எதுவும் இல்லை கோளாறு.

 

நிஜமாகவே  இருக்க வேண்டும்

உள்ளத்தில் நான் இப்போது உணர்வது

அடித்துச் சொல்கிறது என்னுள்ளம்.

  

சஹாராவில் ஏன் மலராது  

வண்ண மலர்கள்?

Comments

Popular posts from this blog

மனிதர் புரிந்து கொள்ள.....

பக்கத்து வீட்டு மரணம்....