நான் யார்....................?
"நான் யாரென்று எனக்கே தெரியாது" என்று ஓஷோ சொல்வதை எப்படி
நடைமுறைப் படுத்துவது என்று நான் கேட்கப்பட்டேன்.
ஓஷோ சொல்வதை நடைமுறை படுத்துவதற்கு முன்னால் ஓஷோ ஏன் இப்படிச் சொல்கிறார் என்று
புரிதல் முக்கியம் அல்லவா? நான் புரிந்து கொண்டதை இங்கே சொல்கிறேன்.....
நான் என்று தனித்தில்லை என்பதால்; இல்லாத ஒன்றை இதுதான் நான் என்று எப்படிச் சொல்வது என்பதால்
"நான் யாரென்று எனக்கே தெரியாது" என்று ஓஷோ சொல்லி இருக்கலாம். இது தெரிந்து
கொள்ள வேண்டிய ஒரு விசயம்தானே தவிர அது நடைமுறைப்படுத்த வேண்டிய விசயமில்லை. அவர் இப்படிச்
சொன்னதற்கு வேறு காரணமும் இருக்கக் கூடும். ஏன், எப்படி என்கிற காரணத்தை இறுதியில் சொல்கிறேன். இருப்பினும் நீங்கள்
நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என்று விரும்பினால் அதைச் செய்வதற்கு நீங்கள் யாரென்பதை
உணர்ந்து,
நான் என்கிற எண்ணத்தை விட்டொழிப்பதே ஒரே வழி.
நீங்கள் யாரென்பதை உணர்ந்து, நான் என்கிற எண்ணத்தை விட்டொழித்து விட்டால் அதன் பிறகு
"நான் யார் என்று எனக்கே தெரியவில்லை" என்று கூட சொல்ல முடியாமல் போய்விடும்.
நீங்கள் யார் என்பதை உலகம் சொல்லும். அப்படிச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்களின்
பாதை உங்களுக்குத் தெளிவாகத் தெரிவதால் அந்தப் பாதையில் எந்த எதிர்பார்ப்புகளும், அங்கீகாரத் தேவைகளுமின்றி உங்கள் பயணம் இனிதே தொடரும்.
Use your mind, use your body என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
ஆனால், use your
spirit / soul என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? ஏன் அப்படிச் சொல்வதில்லை என்று சிந்தித்திருக்கிறீர்களா? ஏனென்றால் அப்படிச் சொல்லத் தேவையில்லை என்பதே அதன் காரணம்.
நம்முடைய soul தான் நம்முடைய உடல், மனம் இரண்டையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதால் தான்
அப்படிச் சொல்லாமல் use your
body, use your mind என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள். அதாவது நம்முடைய ஆன்மாவைப் பார்த்து.
இப்போது சொல்லுங்கள் நாம் என்பது யார்? ஆன்மா தானே. My body என்று சொல்லலாம். தவறில்லை. My mind என்று சொல்லலாம் தவறில்லை. My soul என்று சொல்வதில்தான் சிக்கலே வருகிறது. ஏன் அப்படிச் சொல்ல முடியாது
என்றால் your body and
your mind belongs to your soul and your soul belongs to God Almighty. அப்படியானால் my mind, my body என்று சொல்வது யார்? நம்முடைய ஆன்மா தானே? அப்படியானால் இப்போது சொல்லுங்கள் நாம் என்பது யார்? ஆன்மா தானே. நாம் என்பது நம்முடைய ஆன்மா என்றால் இருப்பதெல்லாம்
ஆன்மாக்கள் தானே? அந்த ஆன்மாக்கள் எல்லாமும் இறைவனுடையது
என்றால் இருப்பதெல்லாம் இறைவன்தானே?
நாம் என்றோ நான் என்றோ இல்லை தானே? நிலைமை இப்படியிருக்கும் போது நான் யார் என்று எப்படிச் சொல்ல
முடியும்? இதன் காரணமாகவே ஓஷோ நான் யாரென்று எனக்கே
தெரியவில்லை என்கிறார்.
"அறங்கள் யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
என்பார்கள். இதை ஆன்மீகத் தளத்தில் நின்று பார்க்கும் போது எழுத்தறிவில்லாதவன்
....அதாவது ஞானம் இல்லாதவன் ஏழை;
எழுத்தறிவுள்ளவன் ....அதாவது ஞானம்
இருப்பவன் பணக்காரன்; அறங்கள் ....அதாவது தர்மங்கள் / சேவைகள்
/அமல்கள் அனைத்திலும் கோடி புண்ணியம் தரக்கூ டியது ஞானம் இருப்பவன் தன்னிடம் இருக்கும்
ஞானத்தை அந்த ஞானம் இல்லாதவனுக்கு கொடுப்பதே என்கிற செய்தி வருகிறது.
பரம்பொருளைப் பற்றிய ஞானத்தைப் பெற்று அந்த ஞானத்தில்
செல்வந்தனாக இருப்பவன் அந்த ஞானத்தில் வறியவனாக இருப்பவனுக்கு அந்த ஞானத்தைக் கொடுப்பது அறங்கள் அனைத்திலும் கோடி புண்ணியம்
பெற்றுத்தரக் கூடிய மிகச் சிறந்த அறம். என் ஞானம் என்னுடைய அனுபவம். அதை உனக்குச் சொல்வதில்
பிரயோஜனமில்லை, உன்னுடைய ஞானத்தை நீயே உன் அனுபவங்கள்
மூலம் தேடிக்கொள் என்று சொல்வதல்ல. மனித வரலாற்றில் ஞானத்தைப் பெற்றவர்கள் எவரும் அப்படி
இருந்திருக்கவில்லை, இருக்கவும் மாட்டார்கள். இருக்கவும்
முடியாது.
ஒருவேளை ஒருவர் அப்படிச் சொல்வதாக ஒரு பேச்சுக்கு வைத்துக்
கொண்டாலும், என்ன அனுபவங்களைத் தேடுவது என்கிற கேள்வி
வரும். அந்தக் கேள்விக்காவது அப்படிச் சொல்பவரோ அல்லது வேறு எவரேனுமோ அந்த கேள்விக்கான
பதிலை சொல்லித்தந்தே ஆக வேண்டும். அதைத்தான் காலம் காலமாக பெற்றோர்களும், மற்றோர்களும், ஞானிகளும் சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சொல்லித் தரும்போது கேட்பவருக்கு
சில கேள்விகள் வரும். என் அனுபவத்தை நான் உனக்குச் சொல்கிறேன். அதை கேள்விகள் கேட்டு
ஏன் விவாதம் செய்கிறாய் என்று கேட்காமல் தனக்குத் தெரிந்தவரை, தன்னால் முடிந்தவரை பதில் சொல்லியே ஆகவேண்டும். என் புத்தகங்களை
படித்துக்கொள், இங்கே, அங்கே என்று நான் எழுதும் கட்டுரைகளை படித்துக்கொள் என்று சொல்வது
பொருத்தமாகாது. அங்கேயும் அவருக்கு இதே கேள்விகள் வரும் என்பதால்.
அனுபவம் என்பது வேறு; அனுபவ அறிவு என்பது வேறு. Experiential knowledge (அனுபவ அறிவு) is different from the experience itself. தீயைத் தொட்டால் சுடும் என்பது அனுபவ
அறிவு. தீயை தொட்ட போது அது சுட்டதே அது அனுபவம். தீயை தொட்டால் சுடும் என்கிற அனுபவத்தினால்
கிடைத்த அறிவை நாம் பகிரும் போது "ஏன் தீ சுடுகிறது" என்று ஒருவர் கேள்வி
கேட்கத்தான் செய்வார். ஏன் சுடுகிறது என்பதை நீயே தொட்டுப் பார்த்து தெரிந்துகொள் என்று
சொல்ல முடியாது. தீயின் தன்மை,
தோலின் தன்மை மற்றும் மென்மை, சுடுதல் என்றால் என்ன என்று இவைகளை எடுத்துச் சொல்லி இந்த இந்த
காரணங்களினால் சுடுகிறது என்று நம்மால் முடிந்தவரை விளக்கம் சொல்லத்தான் வேண்டும்.
தீ சுட்டபோது அந்த உணர்வு எப்படி இருந்தது என்கிற கேள்வி
வருமானால் அதற்குத்தான் நம்மால் பதில் சொல்ல முடியாது. தீ ஏன் சுடுகிறது என்பதற்கு
விளக்கம் கொடுக்க முடியும்,
முடிய வேண்டும். இல்லை என்றால் அப்படிச்
சொல்வதை தவிர்க்க வேண்டும்.
தீ சுட்டதை உணர்ந்தது ஆத்மா. அதன் மொழியை நம்முடைய மொழிகளில்
மொழி பெயர்க்க நினைத்தால் அது மௌலானா ரூமி சொல்வது போல பலஹீனமான மொழி பெயர்ப்பாகவே
அமையும். மொழி பெயர்க்க முடியவில்லை என்பதால் ஆன்மாவின் மொழி மௌனம் என்று அர்த்தமில்லை
. மௌனம் என்பது ஒரு குறியீடு. அப்படிச் சொல்வதே ஒரு பலஹீனமான மொழி பெயர்ப்புதான். ஆனாலும்
வேறு வழி இல்லை. இந்த அளவிற்கேனும் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆன்மாவின் மொழி மௌனம்.
ஆகவே உண்மையில் ஆன்மாவை அறிந்தவன்.... அதாவது ஆன்மீக முதிர்ச்சி உள்ளவன் மௌனியாகி விடுவான்
என்பதெல்லாம் இல்லை. அப்படிப் பார்த்தால் ஆன்மீக ஞானிகளெல்லாம் மௌனிகளாகி இருக்க வேண்டும்.
ஆன்மீக முதிர்ச்சி உள்ளவர் தனக்கு கிடைத்த ஆன்மீக ஞானத்தை
அந்த ஞானம் போதுமானதாக இல்லாத வறியவர்களுக்கு கொடுக்க முயற்சிப்பார். ஆனால் எவ்வளவு
சொன்னாலும் அவரால் அதை சொல்லி முடிக்க முடியாது. காரணம் ...விழிப்பு, தூக்கம் என்கிற இரண்டு நிலையிலும் நொடி தோறும் அவர் ஆன்மீக அனுபவங்களையும், ஆன்மீக அறிவையும் தொடர்ந்து அடைந்து கொண்டே இருப்பதால். ஆன்மீக
அனுபவமும், அந்த அனுபவங்களினால் கிடைக்கும் ஆன்மீக
அறிவும் முடிவில்லாதது,
அளவிட முடியாதது. சொல்லி முடிக்க முடியுமா
என்ன?
So, what we do? We end up loving forever (someone or
something or our own self) and we also end up trying to express it forever. May
be this is why they say love is God & God Is Love and may be this is why
Mowlana Rumi chose to express God through his poems with love as their main
theme. So is Osho. Because the amount of experience he was going through
similar to every enlightened person was so overwhelming, constantly changing
and every experience was so unique that he ended up saying I don't know who I
am anymore. But at the same time he did not stop speaking. He kept on speaking
in an attempt to share his experiential knowledge in large and the experience
itself to some extent. This is why I said in the beginning that we don't need
to necessarily practice or implement what he said about his state of being when
he said it.
ஒரு உள்நோக்கத்துடன், ஒரு நல்ல நோக்கத்துடன் சில விசயங்களை ஆங்கிலத்தில்
எழுதி இருக்கிறேன். ஆங்கிலம் தெரியாதவர்கள் முயற்சி செய்து புரிந்து கொள்ள முயலுங்கள்.
ஆங்கிலம் கற்றுக் கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வது எளிது.
பல ஞானிகளின் பிரமாதமான ஆன்மீகச் செய்திகள் ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
அவற்றை படித்துப் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment