டக்டக்...டக்டக்..பட்பட்....பட்பட்..
கண்களின் இதழ்கள் கவிதை பேசின
இச் இச் ....இச் இச்
கன்னத்தில் இதழ்கள் காவியம் பாடின
சட்சட்...சட்சட்...
வானத்தின் இதழ்கள் மாமழை பொழிந்தன
டப்டப்....டப்டப்...
இதயத்தின் இதழ்கள் உயிரிசை உணர்த்தின
பட்பட்....பட்பட்...
பூக்களின் இதழ்கள் புன்னகை பூத்தன
தக்தக்...தக்தக்...
தத்தையின் இதழ்கள் தன் தாய் மொழி பேசின
தட்தட்...தட்தட்...
கால்களின் இதழ்கள் காற்றாய் பறந்தன
டுப்டுப்..டுப்டுப்...
துப்பாக்கியின் இதழ்கள் உயிர்களில் துளைகள் போட்டன
சல்சல் ....சல்சல்...
உயிரிகளின் உதிரம் ஊரெங்கும் வடிந்தன
கட்கட்....கட்கட்...
கனவின் இதழ்கள் என் கற்பனை மூடின
திக்திக்....திக்திக்
பயத்தின் இதழ்கள் உள்ளத்தில் குவிந்தன
இடப்பக்கம் இதயம் சோர்ந்து என் மனைவி
வலப்பக்கம் அழுது சோர்ந்த என் குழந்தை
அண்மையில் குண்டு சத்தம்
அகத்திலோ அச்சத்தின் உச்சம்
புன்னகைத்த பூக்களின் மேல் பூட்சு கால்கள்
டப்டப்...டப்டப்...
டுப்டுப்...டுப்டுப்...
திக்திக்....திக்திக்...
Comments
Post a Comment