இது ஒரு பொன் மாலை பொழுது....



"இது ஒரு பொன் மாலை பொழுது 
வானமகள் நானுகிறாள் 
வேறு உடை பூணுகிறாள்"

மாலை எனும் மன்னன் தொட்டான் 
வானமெனும் மங்கையவள் மஞ்சள் முகம் 
நாணத்தில் பூசியது சிவப்பு நிறம் 
மேகமெனும் ஆடை மெல்லக் களைந்தாள் 
வெள்ளுடல் சிலிர்த்து 
வெட்கம் பூசியது 
மஞ்சளோடு பொன் வண்ணம். 

வானச்சுவற்றின் மீதிலே 
இறைவனின் மந்திரத் தூரிகை
மாலையில் தீட்டிய இவ்ஓவியம்
பார்த்த என் கண்களில் பல கோடி மின்னல்கள்
துவண்டிருந்த என் நெஞ்சிலே உற்சாகத் துள்ளல்கள்.
 
அகம் மயக்கும் இது போல மாலையும்
உளம் கிறக்கும் அதிகாலை வேலையும்
அவன் (இறைவன்) இருப்பிற்கு அத்தாட்சி
இவ்வுண்மை உலகிற்கு இன்று நான் உரைத்தமைக்கு
என் ஆத்தா நீயே சாட்சி.

Comments

Popular posts from this blog

மனிதர் புரிந்து கொள்ள.....

சஹாரா பூக்கள் பூத்ததோ....

கடவுள் பாதி மிருகம் பாதி....