பாப்பா பாடும் பாட்டு....
தத்தி தத்தி தவழ்ந்தே வந்து
மொட்டு மொட்டு பவழ வாய் திறந்தே
திக்கி திக்கி திகட்டா இனிமையில் மழழை பேசி
பட்டு பட்டு உன் மென் விரல்களால் என்னை தொட்டு தொட்டு
சட்டு சட்டென என் சோர்வனைத்தும் போக்கி
அள்ளி அள்ளி உன்னை நான் அணைக்கையிலும்
நான் கிள்ளி கிள்ளி உன் கன்னம் சிவக்கையிலும்
துள்ளி துள்ளி என்னை சுற்றி பட்டாம் பூச்சியாய் நீ பறக்கையிலும்
பூ பூவாய் நான் மலர்வேன்
என்னையும் என்னிலிருந்து உன்னையும்
படைத்தவனின் பாதங்கள் மனதால் நான் படிவேன்
"பாப்பா பாடும் பாட்டு
கேட்டு தலைய ஆட்டு"
Comments
Post a Comment