நீயும் நானும் ஒண்ணா சேர்ந்தா.....

ஒட்டிய வயிற்றில் நிமிர்ந்தது நடை 
நடக்கையில் வான் நோக்கி வளைந்தது தலை 
வளையும் தலை முடிவினில் தொடருது முகம் 
தொடரும் முகத்தின் குழிகளில் உருளுது கரு விழி 
உருளும் கரு விழிகளில் பரவுது வான்வெளி 
பரவும் வான்வெளியில் மலருது பல மலர் வண்ணம் 
மலரும் வண்ணத்தின் கன்னத்தில் தவழுது மழை 
மேகம் தவழும் மேகத்தின் கருப்பையில் தளும்புது மழைத்துளி 
தளும்பும் மழைத்துளிகளில் நனையுது புல்வெளி 
நனையும் புல்வெளியில் படருது பட்டுப்பூ 
படரும் பட்டுப்பூவின் மடியினில் கொட்டுது சுவை தேன் 
கொட்டும் அந்த தேன் சுவை சொட்ட உன்னை நான் சிந்தித்தேன் 

உன் நினைவினில் தவழுது என் மனம் 
தவழும் அந்த மனதினில் விழுகுது உன் முகம் 
விழும் முகத்தினில் தெரியுது உன் வளம் 
தெரியும் வளத்தினில் தெளியுது என் நிலை 
தெளியும் நிலையினில் தெரியுது என் பிழை 
தெரியும் பிழையினில் தெளிவாய் புரியுது என் நிலை 

ஒட்டிய வயிற்றில் தளருது என் நடை 
நடையினில் நிலம் நோக்கி வளையுது தலை 
வளையும் தலை முடிவினில் தொங்குது என் முகம் 
தொங்கும் முகத்தின் குழிகளில் மிரளுது கரு விழி 
மிரளும் கரு விழிகளில் கசியுது கண்ணீர் 
கசியும் கண்ணீரில் கரையுது உன் முகம் 
கரையும் உன் முகத்தால் கலங்குது என் அகம் 

"நீயும் நானும் ஒண்ணா சேர்ந்தா நினைச்சது நடக்கும் புள்ள" 
சுகமான காற்றில் இதமான கீதம் 
இதமான கீதத்தில் மிதமான என் சோகம் 
விண் நோக்கி வளையாத என் தலை 
மண் நோக்கி துவளாத அதன் நிலை 
நேரடி பார்வையில் தொடச் சொல்லி தூண்டுது தொடுவானம் 
தொடுவானத்தின் தூரத்தில் கரையுது மழை மேகம் 
கரைகையில் காட்டுது காதல் யாகம் 
அந்த யாகத்தின் யோகத்தில் பிறக்குது புது வேகம் 

"நீயும் நானும் ஒன்றா சேர்ந்தா நினைச்சது நடக்கும் புள்ள" 
 நீயும் நானும் ஒன்றா சேர நினைச்சதும் நடக்கும் புள்ள.

Comments

Popular posts from this blog

நிஜமும் நடிப்பும் ....நானும் நாமும்

சஹாரா பூக்கள் பூத்ததோ....

வாராயோ என் தோழி வாராயோ?