மனிதர் புரிந்து கொள்ள.....
நீல வானை கடந்தன வெள்ளைப் பறவைகள்.... வானம் வெள்ளையானது, பறவைகள் நீலமாயின. மழை பொழிந்தது..... மண் மகிழ்ந்தது, வானம் வறண்டது. என்னவளை நான் கடந்தேன்....... என் நேசம் அவளிடத்தில், அவள் சுவாசம் என்னிடத்தில். அவள் அன்பை பொழிந்தாள் என் மீது.... என் உள்ளம் நெகிழ்ந்தது, அவள் உள்ளம் மகிழ்ந்தது. ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டுமாம் இழப்பில்லை இங்கே எவருக்கும். இந்த விந்தை எப்போதும் நிகழ்வதெப்படி? எங்கள் அன்பு.... எத்தனை கொடுத்தாலும் குறைவதில்லை எத்தனை பெற்றாலும் நிறைவதில்லை வெள்ளையாய் மாறும் நீலவானில்லை நீலமாய் மாறும் வெள்ளைப் பறவையில்லை. என்னை இழந்து நான் அவளைப் பெறுவதில்லை தன்னை இழந்து அவள் என்னைப் பெறுவதில்லை நான் நானாக என் போ...