Posts

Showing posts from September, 2013

இறைவனே ....I Love You

Image
என்னை தொலைத்து உன்னை புரிந்தேன்; என்னை தொலைத்தும் உன்னைப் புரிந்த விந்தையறிந்து வியந்தேன். தலை தூக்கி விண்ணை பார்த்தேன்; தலை தாழ்த்தி மண்ணை பார்த்தேன்; விண்ணில் தெரிந்ததே மண்ணிலும். விண்ணைப் பார்க்கையில் என் விழி வழி உன் வழி; மின்னித் தெரிவதென்ன உண்மையில் விண்மீனா? மண்ணைப் பார்க்கையில் என் வழி வழி உன் விழி; இனி "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை". "விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் அரங்கிலேருதாம்" ஓ ...ஓ...ஓ .... என் இறைவா I Love You. போற்றினாலும் புகழ்ந்தாலும்  நாடினாலும் நெகிழ்ந்தாலும் எந்தக் கனமும் இறையோடு இணையுங்கள் இதயக் காதலோடு,  இறைக் காதலோடு.

நீயும் நானும் ......

Image
பரந்த வானம் நீ பால் நிலா நான் தோன்றித் தேய்ந்து மறைந்து தோன்றித் தேய்ந்து மறைந்தெனவே உன்னுடனே உனக்குள்ளே உனதாலே உனதிச்சைப்படியே. மலர்ந்த மலர் நீ மயங்கிய வண்டாய் நான் உன் மீது உனக்குள்ளே உனையே சுற்றிச் சுற்றி தேன் குடித்து மாளேன் நான் தேன் குடித்தும் மீளேன் நான். தேகம் தொடும் தென்றல் நீ நீ தொடும் தேகம் நான் எனைத் தொடவே தென்றலாய் நீ நீ தொடவே உன் தேகமாய் நான். எனைத் தாங்கித் தவழும் கருமேகம் நீ நீ சுட்டிய இடத்தில் விரும்பிய வினாடியில் உன்னிலிருந்து உனதால் நம் மண்ணுயிர்க்குப்  பெய்யும் மாமழை நான். அலை புரளும் கடலாய் நீ அந்தக்  கடலில் புரளும் அலையாய் நான் கடலின்றி அலையேது அலையின்றி கடலேது நீயின்றி நான் ஏது நானின்றி நீ ஏது நாமின்றி நமதேது? ஒளியாய் நீ. அந்த ஒளியின் ஒளியாய் உன்னிலிருந்து நான். எனைப் புகழ்ந்து உனை போற்றுகின்றார் என் புகழுக்கு உரியவன் நீ என்பதாலே நானே புகழ்வதும் நீயே என்பதாலே. என்னைப் பார்த்தவர் என்னில் மயங்கி  உன்னில் நானாய் உறங்குவோர் என்னைப் பார்க்கத் துடிப்பவர் தன்னில் உறங்கி  உன்னில் நானாய் விழிப்போர். உன்னை...

என் அறிவு ..........

Image
என் அறிவு  நான் தேடிச் சேர்த்த என் துயரம். இனி த் தெரிந்து கொள்ள ஏதுமில்லை  எனச் சொல்ல நிறைவாயுமில்லை ஏதும் தெரியாது  எனச் சொல்ல குறைவாயுமில்லை. நிறை குடம் எனப் போற்றுவாருமில்லை அரைகுறை என ஏசுவாருமில்லை. நீண்ட நீர்வழிப் பயணத்திலே தொலைந்து போயின என் துடுப்புகள்.... நடுக்கடலில் தத்தளிக்கும் என் படகு..... ஆயினும் இல்லை உயிர் பிழைக்கும் போராட்ட ம் என்னிடத்திலே. தத்தளிப்பு தந்த தாலாட்டிலே எத்தனையோ நாட்களாய் விட்டுப் போன அத்தனை தூக்கமும்  எட்டிப்பிடிக்கும் களிப்பிலே என் கண்கள். "நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் நேரம் நெருங்குதம்மா" உலர்ந்து போய்க் கொண்டிருந்த உதடுகள் வழியே உற்ச்சாகமாய் வந்தன சோகப் பாடல் வரிகள். என் அறிவு  நான் தேடிச் சேர்த்த என் துயரம்; ஒன்றைத்தவிர ஒன்றுமேயில்லை என்பதைத்தவிர இதுவரை நான் தெரிந்து கொண்டது எதுவும் ஒன்றுமேயில்லை இனி நான் தெரிந்து கொள்ளவும் ஒன்றுமேயில்லை. துயின்று விழித்து உண்டு உடுத்தி உழைத்துக் களைத்து உண்டு உடுத்தி கலைத்துக் களித்து களைத்துக் கண்மூடி ...