சஹாரா பூக்கள் பூத்ததோ....
உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். எப்போதும் பூக்கும் வேர்வைத் துளிகளின் இடத்தில் இப்போது பூக்களாய் பனித்துளிகள். காதை கொடு கிசுகிசுக்கிறேன் காரணத்தை. உன் செவிகளின் அழகில் என் இதழ்கள் இறக்காமல் இருக்குமானால். நேத்தைக்கு 'செல்லோ'... சரி...தட்டச்சு தவறாக இருக்கலாம் என கடந்தேன் தளர்வுடன். இன்றைக்கு அன்பில் துடிக்கும் உன் அழகு இதயம்... பார்த்ததும் கேட்டது பாடல்: "சஹாரா பூக்கள் பூத்ததோ?" காண்பது நிஜம்தானா? தட்டச்சு தவறு என்பது போல, கண்களை சோதிக்க வேண்டுமென கடந்து போக முடியவில்லை இதையும். தவிக்கிறேன், துடிக்கிறேன். எப்படி அறிவேன் நிஜம்தான் இது என்று? இங்கு... உச்சத்தில் சூரியன் உக்கிரமாய். உடலுக்கு வெளியே சஹாரா, உள்ளத்தினுள்ளோ அண்டார்டிகா. இருபது வயது பையனின் இதயம் போல ஐம்பது வயதில் பட படக்கிறது அரைக்கிழவனின் அழகு இதயம். என் இதயம் அழகு என்பதை அறிவேன் நீயே அழகாய் அதை அலங்கரிப்பதால். கண்களில் இருக்கலாம் கோளாறு உன்னை அவை பார்ப்பதில்லையே! ஆனால்... உன்னை சுமக்கும் என் உள்ளத்தில் ஏனிந்த ப...