Posts

Showing posts from October, 2021

என் பாட்டு ...நம் பாடல்

Image
  வெள்ளைப் புறா ஒன்று  தத்தித் தத்தி தாழ்வாரத்தில் நடை போட்டதில்  துள்ளித் துள்ளி பிறந்ததோர் ராகம் என் உள்ளத்திலே  ராகம் பிறந்த நிமிடங்களிலிலே தாளமும் பிறந்தது  ராகமும் தாளமும்  ஓட்டிப் பிறக்காத ரெட்டைக்  குழந்தைகளாய்.  குழந்தைகள் பிறந்த குதூகலத்தில்  வார்த்தைகள் தானாய் வந்து வீழ்ந்தன மடி மேலே  முத்துக்களாய் வார்த்தைகளை கோர்த்தபோது  முத்து மாலைகளாய் உண்டாயின வரிகள். இனிய ராகம் மெல்லிய தாளம் முத்துக்களாய் பாட்டுவரிகளென  உன் அருள்பெற உருப்பெற்றது  அழகிய குழந்தையாய் என் பாடல்  என் பாட்டுக் குழந்தைக்கு  பட்டாடையாய் உன் பட்டுக் குரல் கேட்டேன்  உன் பட்டுக் குரல் மட்டுமே கேட்டேன்  உறங்கப் போகிறேன் என்றாய் தளர்வாய்  விழித்ததும் .....? எனக் கேட்டேன் தயக்கமாய்  பார்க்கலாம் என்றாய் சற்று பரிகாசமாய்  நீ விழித்ததும் விடிந்த அந்நன்னாளில்   இப்போது ....? எனக் கேட்டேன் பரிதாபமாய்  இன்று வேலைகள் அதிகம்  பார்க்கலாம் நாளை என்றாய் இறுக்கமாய்.   நாளை வருமோ?  நம் பாட்டுக் குழ...