நான் யார்....................?
" நான் யாரென்று எனக்கே தெரியாது" என்று ஓஷோ சொல்வதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்று நான் கேட்கப்பட்டேன். ஓஷோ சொல்வதை நடைமுறை படுத்துவதற்கு முன்னால் ஓஷோ ஏன் இப்படிச் சொல்கிறார் என்று புரிதல் முக்கியம் அல்லவா ? நான் புரிந்து கொண்டதை இங்கே சொல்கிறேன்..... நான் என்று தனித்தில்லை என்பதால் ; இல்லாத ஒன்றை இதுதான் நான் என்று எப்படிச் சொல்வது என்பதால் "நான் யாரென்று எனக்கே தெரியாது" என்று ஓஷோ சொல்லி இருக்கலாம். இது தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம்தானே தவிர அது நடைமுறைப்படுத்த வேண்டிய விசயமில்லை. அவர் இப்படிச் சொன்னதற்கு வேறு காரணமும் இருக்கக் கூடும். ஏன் , எப்படி என்கிற காரணத்தை இறுதியில் சொல்கிறேன். இருப்பினும் நீங்கள் நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என்று விரும்பினால் அதைச் செய்வதற்கு நீங்கள் யாரென்பதை உணர்ந்து , நான் என்கிற எண்ணத்தை விட்டொழிப்பதே ஒரே வழி. நீங்கள் யாரென்பதை உணர்ந்து , நான் என்கிற எண்ணத்தை விட்டொழித்து விட்டால் அதன் பிறகு "நான் யார் என்று எனக்கே தெரியவில்லை" என்று கூட சொல்ல முடியாமல் போய்விடும். நீங்கள் யார் என்பதை உலகம் சொல்லும். அப்படி...