Posts

Showing posts from November, 2013

நான் யார்.......?

Image
திடுமென ஓர் நாள்...... உண்மையில் நீ யார் விளித்தான் உயிர் நண்பன் உண்மையில் நீ யாரோ அதுவே நான் என்றேன் நான் உண்மையில் நீ யார் மீண்டும் விளித்தான் விடாக்கொண்டன் உண்மையில் நான் நீ நீ நான் நாம் அவன் என்றேன் நான் ஒருமை கேள்விக்கு பன்மையில் பதில் ஏன் என்றான் அவன் பன்மையில் ஏது ஒருமை ஒருமையில் ஏது பன்மை என்றேன் நான் ஒருகணம்  வடிவேலு போல விழித்தான் மறுகனம் சந்தானம் போல முறைத்தான் பின் கவுண்டர் போல கலாய்த்தான் இறுதியில் விவேக் போல நகைத்தான் நண்பேன்டா என்பதால் அவன் நகைப்பில் நானும் கலந்தேன் நகைத்து முடிக்கையில் உண்மையில் நீ யார் என்ற கேள்வியோடு அப்புறம் அவன் பறந்தான் இப்புறம் தளர்வோடு நான் நகர்ந்தேன் உண்மையில் நான் யார் அவன் என்னிடம் கேட்டதை என்னிடம் நான் கேட்கிறேன் சில நேரங்களில் சில நேரடி கேள்விகளுக்கு மறைமுகமாய் கூட பதில் சொல்ல முடிவதில்லை பதில் இருந்தும் தெரிந்தும். இலக்கு ஒன்றாயின் ஓர் திசையில் சாத்தியம் இருவேறு பாதைகள் இலக்கு ஒன்றாயினும் பாதை ஒன்றாயினும் வெவ்வேறு திசைகளில் எப்படிச்  சாத்தியம்  இணைந்த பயணம் எப்படிச்  சாத்தியம்  இசைவான பயணம்? ஒன்று செய் திசையை மாற்ற...

என் முகம்...உன் முகம் ...உன் முகம் ....என் முகம்

Image
நான் நிஜத்தில் தொலைத்தது உன் முகம் நான் கனவில் தொலைத்தது என் முகம் கனவே கலையாதே. கண்ணாடி காட்டுது என் முகம் அதன் பின்னாடி மறையுது உன் முகம் கண்ணாடியே  காணாமல் போ. நான் மகிழ்ந்து இருக்கையில் என் முகம் நான் நெகிழ்ந்து இருக்கையில் உன் முகம் மகிழ்ச்சியே மறைந்து போ. நான் ஊரோடு இருக்கையில் என் முகம் நான் தனித்து இருக்கையில் உன் முகம் ஊரே என்னை ஒதுக்கிவை. நான் மனிதரில் பார்ப்பது என் முகம் நான் மலர்களில் பார்ப்பது உன் முகம் மனிதனே மலராகிப் போ. இருளில் இருப்பது என் முகம் ஒளியில் ஒளிர்வது உன் முகம் இருளே இறந்து போ. என் உயிரில் தெரிவது உன் முகம் என் உடலில் தெரிவது என் முகம் உடலே உயிரை விடு.