அன்பு....
பண்பில் சிறந்தது அன்பு அந்த அன்பில் உயர்ந்தது தாயன்பு தாயெனும் அன்பு காட்டித் தருவது தகப்பன் எனும் பேரன்பு தாயும் தகப்பனும் கூடித் தருவது உடன்பிறப்பு எனும் வாடா மலரன்பு காய்ந்த மண்ணுக்கு கடவுளின் கருணை மழையெனும் அன்பு தோய்ந்த நெஞ்சுக்கு நட்பின் கருணை சுகமெனும் அன்பு அந்த நட்பில் மலர்வதும் அன்பு அந்த நட்பையே மலரச் செய்வதும் அன்பு கண்களில் ஈரத்தின் காரணம் அன்பு நெஞ்சத்தில் வீரத்தின் தீரம் அன்பு "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" அன்பு "விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சி" அன்பு அன்பில்லா உலகம் பண்பில்லா நரகம் அன்பு கொண்டு வளர்ப்போம் பண்பான பேருலகம் "அன்பே சிவம்"